Wednesday, February 26, 2014

மூலிகை சாபநிவர்த்தி

மூலிகை சாபநிவர்த்தி மந்திரம்

பொதுவான மந்திரம் 


”ஆனைமுகனை அனுதினமும் மறவேன் அகத்தியர் சாபம் நசிநசி!

பதினெண்சித்தர் சாபம் நசிநசி! தேவர்கள் சாபம் நசிநசி!

மூவர்கள் சாபம் நசிநசி! மூலிகை சாபம் முழுதும் நசிநசி!.”

குறிப்பு : மேற்கூறிய மூலிகை சாபநிவர்த்தி மந்திரத்தை  ஞாயிற்றுக்கிழமை  பிரம்ம முகூர்த்த வேலையில் ஆதிமூலக்கொடிக்கு (கொடிஅருகு) கன்னி நுால்காப்பு கட்டி மறு ஞாயிற்றுக்கிழமை வரை தொடர்ந்து ஒரு இலட்சம் உரு ஏற்றவும். பிறகு நமக்கு தேவையான பட்சத்தில் மூன்று முறை கூறி சாபநிவர்த்தி செய்து நமக்கும் பிறர்க்கும் பயன்படுத்தலாம்.

மூலிகை பிராண பிரதிஷ்டை


”ஓம்மூலி மஹாமூலி ஜீவமூலி

உன் உயிர் உன் உடலில் நிற்க சிவா.”

குறிப்பு : இந்த மந்திரத்தை மூன்றுதரம் சொல்லி கொஞ்சம் விபூதியும் அருகம்புல்லும் மேலே போட்டு வணங்கி ஆணிவேர் அருபடாமல் விரல்நெகங்கள் படாமல் எடுத்து பயன்படுத்திக் கொள்ள மூலிகை உயிருடனிருந்து பலன் கொடுக்கும்.

சர்வ வசிய மூலிகை


  ஆதிவாரத்தில் ஆலம் புல்லுருவிக்கு சாப நிவர்த்தி செய்து பிராண பிரதிஷ்டை செய்து துாப தீபம் காட்டி மஞ்சள் நுால் காப்பு கட்டி மறு ஆதிவாரம் சூரிய உதயத்தில் பொங்கலிட்டு பால் பழம் நைவேத்தியம் வைத்து  துாப தீபங் காட்டி ”அம் அம் வசீகரம் ஜெயமாதா” என்று  இலட்சம் உரு கொடுத்து எடுத்துக்கொள்ளவும். இதனால் சர்வ வசியமும் சித்தியாகும்.











Tuesday, February 25, 2014

பூஜாவிதி

செய்முறை பூஜாவிதி

 
  சுத்தமாகிய தனிமையான ஓர் அறையில் பத்மாசனத்தில் வடகிழக்காக அமர்ந்து, அடி முடி நடுவாய் மனதை நிறுத்தி, செப்புத்தகட்டில் வரைந்த யந்திரதுக்கு சாபவிமோசனம் பிராணபிரதிஷ்டை செய்து, ராஐ கனியால் சுத்தி செய்து எண்ணை, சீக்காய், பால், தயிர், நெய், தேன், பஞ்சாமிர்தத்தால் அபிசேகம் செய்வித்து  நம்மால் முடிந்த நைவேத்தியம் படைத்து, யக்ஞம் வளர்த்தி யக்ஞபிரதிஷ்டை செய்வித்து உருத்தராட்ச மணியால் காலை பகல் மாலை நடுநிசியாக தொடர்ந்து குண்டலினி வல்லபை சக்தியை மூலாதாரத்தில் பாவனையால் சக்தியை எழுவித்து ஒருமண்டலம் பயிற்ச்சித்தால், இந்த மூலவிநாயகர் வசியத்தால் அஷ்டமா சித்தியும், அஷ்ட கர்மமும் கரதலா கமலம்போல் நடைபெறும். 

Saturday, February 22, 2014

கணபதி வசியம்



கணபதி வசியம்


ஸ்தோத்திரம்

பிரணம் யா சிரசா தேவம்

கௌரி புத்ரம் விநாயகம்

பக்தா வாஸம் ஸ்மரேன் நித்யம்

ஆயுர் காமர்த்த சித்தயே.



மூலமந்திரம்



ஓம் ஆதிமூலத்தி கிரியுங் கணபதியே நம

கெங் கங் கணபதி கிரியும் விரியும்

நான் நினைத்ததெல்லாம் என்வசமாக.


வசியமால்

ஓம் கணபதி ஓங்கார கணபதி

குருகுரு கணபதி குண்டலி கணபதி

வாவா கணபதி வல்லபை கணபதி

ஆதிக் கணபதி அநாதிக் கணபதி

சக்திக் கணபதி சமயக் கணபதி

சித்திக் கணபதி சிவசிவ கணபதி

தம்பன மோகன சத்ரு மாரணம்

வசிய உச்சாடனம் வாலைக் கணபதி

அஷ்டமா சித்தியை ஆடுங் கணபதி

ஜெயஜெய கணபதி சீக்கிரம் வாவா

உன்னை நினைக்கவே ஓடிவா கணபதி

சித்து களாடும் செல்வக் கணபதி

ஆம்ஆம் ஓம்ஆம் ஐயுங் கிலியும்

சௌவும் கணபதி தாண்டவமாடு

என் சொல்படியே எதிரினிலாடு

நீயே நானாய் நானே நீயாய்

நினைவிலும் வாக்கிலும் நிற்க சுவாஹா.

  

Friday, February 14, 2014

பிராணயாமம்.

                                                     பிராணயாமம்.

ஆசனங்கள் அனைத்திற்கும் மூலாதாரம் பிராணயாமம்

பிராணாயமம் = பிராணன் + அயாமம் (உயிர்க்காற்று + கட்டுப்படுத்துதல்)

மூச்சுக்காற்றை இயல்பாகக் கட்டுப்படுத்தி நிதானமாக கால அளவோடு சுவாசிக்கும் பயிற்சியே பிராணயாமமாகும்.

குறைவாகவும், மெதுவாகவும் மூச்சுவிடும் ஜீவன்களுக்கு ஆயுட்காலம் அதிகம்.

முயல் 1 நிமிடத்திற்கு 38 தடவை மூச்சு விடுகிறது. அதன் ஆயுட்காலம் 8 ஆண்டுகள்தான். ஆமை 1 நிமிடத்திற்கு 5 தடவை மூச்சு விடுகிறது. அதன் ஆயுட்காலம் 155 ஆண்டுகள். கடலில் வாழும் ஆமைக்கு 300 ஆண்டுகள் ஆயுட்காலம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

மனிதன் 1 நிமிடத்திற்கு 18 தடவை சுவாசிக்கின்றான். இதையே 9 முறை சுவாசித்தால் அவன் ஆயுட்காலம் இரட்டிப்பாகும். கோபம், தாபம், மன அழுத்தம் அதிக உணர்ச்சிகள் உடைய மனிதன் மிகவும் வேகமாக சுவாசிக்கின்றான். இதனால் அவன் நோய்வாய்ப்படுகிறான். மூச்சுப் பயிற்சியால் நோய் நொடி அகலும். ஆயுள் நீட்டிக்கும். பொதுவாக நாம் உள்ளிழுக்கும் காற்று, மூன்றில் ஒரு பங்கு நுரையீரலைத் தான் நிரப்புகிறது. மூச்சுப் பயிற்சியால் நுரையீரல் முழுதும் நிரம்பினால், பிராணவாயு அதிகம் கிடைத்து மூளை புத்துணர்ச்சி பெறும். ஞாபக சக்தி மிகும். படிப்பாற்றல், புத்திசாலித்தனம் கூடும். எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும். நுரையீரல் வியாதிகளைத் தடுக்கலாம்.


மூச்சை உள்ளிழுத்தல் பூரகம் 4 செகண்டுகள்
மூச்சை தக்கவைத்தல் கும்பகம்  16 செகண்டுகள்
மூச்சை வெளியே விடல் ரேசகம் 8 செகண்டுகள்


இந்த மூன்று பயிற்சியினுடைய விகிதம் 1 : 4 : 2 இருத்தல் சாலச் சிறந்தது.

இடது மூக்குத்துவாரத்தின் வழியே மூச்சை உள்ளிழுத்து வெளிவிடுவது இடகலை.

வலது மூக்குத்துவாரத்தின் வழியே மூச்சை உள்ளிழுத்து வெளிவிடுவது பிங்கலை.

இடது மூக்குத் துவாரத்தின் வழி மூச்சை உள்ளிழுத்து, வலது மூக்குத் துவாரத்தின் வழி வெளிவிடுவது சுழுமுனை.

முதலில் பூரகமும், ரேசகமும் நன்கு பயிற்சித்த பின்னரே கும்பகம் பயிற்சி செய்யவும்.

இடகலை = குளிர்ச்சி ; பிங்கலை = சூடானது. சுழுமுனை பிராணவாயுவை அதிகம் நுரையீரலில் தக்க வைக்கும். காரணம் இடது நாசியிலிருந்து சுவாசப் பையின் தூரம் 16 அங்குலம். வலது நாசியிலிருந்து சுவாசப்பையின் தூரம் 12 அங்குலம். இடது நாசியால் இழுத்து வலது நாசியால் வெளிவிடும் பொழுது 4 அங்குலம் மூச்சு (பிராணவாயு அதிகம் உள்ள மூச்சு) நுரையீரலில் உள் தங்குகிறது. இது இரத்தத்தை சுத்தி செய்யும். பிராண சக்தியை அதிகரிக்கும்.

பிராணாயாமம் அட்டாங்க ( 8 விதமான யோக பயிற்சிகள்) யோகத்தின் நான்காம் யோகமாகும்.

(1) பஸ்திரிகா பிராணயாமம் ; செய்முறை.

தியானம் போல் இடம், ஆசனம், மற்றைய நியதிகள் இருக்கட்டும்.
பிராணயாமம் செய்யும் பொழுது மூச்சோடு மனம் ஒன்ற வேண்டும்.
மூச்சை வெளிவிடும் பொழுது வயிறு மட்டும் சுருங்க வேண்டும்.
மூடிய கண்கள் மூக்கின் நுனியைப் பார்த்தபடி இருக்கட்டும்.
மூச்சை இயல்பாக விட வேண்டும்.
வலது கைப் பெருவிரலால் வலது நாசியை அடைத்து இடது நாசியால் மூச்சை முடிந்தவரை உள்ளுக்கிழுத்து நிறுத்தாமல் வலது கை மோதிர விரலால் இடது நாசியை அடைத்து வலது நாசியின் வழியாக மூச்சை வெளிவிடவும். பின் வலது நாசி வழியாக மூச்சை உள்ளுக்கிழுத்து நிறுத்தாமல், வலது நாசியை அடைத்துக் கொண்டு மூச்சை இடது நாசி வழியாக வெளிவிடவும். இப் பயிற்சியை 5-10 தடவைகள் செய்தால் போதுமானது.

(2) கபாலபதி பிராணயாமம் ; செய்முறை.

இரண்டு மூக்குத்துவாரங்களிலும் மூச்சை வேகமாக உள்ளுக்கிழுத்து நிறுத்தாமல் உடனே அதிவேகமாக வெளிவிடவும். இப் பயிற்சியை 5-10 தடவைகள் செய்யவும்.

(3) உஜ்ஜயி பிராணயாமம்.

இரண்டு மூக்குத் துவாரங்களிலும் ஒரே நேரத்தில் மூச்சை முடிந்தவரை உள்ளுக்கிழுத்து (4 செகண்டுகள்) பின் அப்படியே மூச்சை உள் நிறுத்தி (16 செகண்டுகள்) பின் நிதானமாக மெதுவாக வெளிவிடுதல் வேண்டும் (8 செகண்டுகள்).

ஆசிபா (ABS) பயிற்சி

ஆசனவாய், சிறுநீர்ப்பை, பாலியல் உறுப்புகள் அனைத்தும் ஒரே நரம்பினால் எஸ் – 2 (S 2 Segment) இயக்கப்படுகிறது. ஆசனவாயை சுருக்கி, விரிவடையச் செய்யும் பயிற்சியால் அந்த நரம்பு வலுவடைகிறது. பயிற்சியால் பெண்கள் பாலியல் உறுப்புகள் கட்டுப்பாடும், கர்ப்பப்பை வெளித்தள்ளுதல் (Uterine Prolapse) தடுப்பும் பெறுகிறார்கள். சிறுநீரை அடக்குதல் சுலபமாக சாத்தியமாகிறது. ஆண்களுக்கு நீர்த்தாரை கட்டியால் (Prostate) ஏற்படும் முதுமைக்கால நீர்க்கசிவு, கட்டுப்பாடின்மை குறைகிறது. விந்துக் கசிவும் கட்டுப்படுத்தப்படுகிறது.

ஆசிபா செய்முறை :

கால்களை கொஞ்சம் அகல விரித்து, நின்று கொண்டோ அல்லது உட்கார்ந்து கொண்டோ ஆசனவாயை மெதுவாகச் சுருக்கி, பின் விரித்து 10 தடவை பயிற்சி செய்யவும். இப் பயிற்சி செய்யும் பொழுது, மனம் பயிற்சியில் கவனம் செலுத்த வேண்டும். பயிற்சி கஷ்டப்படாமல் இயல்பாக செய்யப்பட வேண்டும். பயிற்சி முடிவில் உஜ்ஜயி பிராணயாமம் செய்யவும். கைகளைக் கும்பிடுவது போல் மேல் தூக்கி மூச்சை இரண்டு நாசிகளாலும் நாலு செகண்டுகள் உள்ளிழுத்து பதினாறு செகண்டுகள் நிறுத்தி பின் எட்டு செகண்டுகள் மெதுவாக வெளிவிடவும்.

ஆசிபா பயிற்சியை ஐந்து முறையும் மாலையில் ஐந்து முறையும் செய்யவும்.
ஆ : ஆசனவாய். சி : சிறு நீர்ப்பை: ப : பாலியல் உறுப்புகள்


எல்லாப் பயிற்சிகளுக்கும் பொது நியதிகள்:

1. பயிற்சிக்காலம் முழுதும் வயிறு காலியாக இருக்க வேண்டும்.
2. காற்றோட்டமான இடத்தில் பயிற்சி செய்தல் நலம்.
3. பயிற்சியில் மனம் லயிக்க வேண்டும். (ஒருமை உணர்வு)
4. முக மலர்ச்சியுடன் பற்றுவைத்து பயிற்சியில் ஈடுபட வேண்டும்.
5. மூச்சை இயல்பாக விட வேண்டும்.
6. இரண்டு பயிற்சிகளுக்கு நடுவில் குறைந்தது 5 நிமிட இடைவெளி தர வேண்டும்.
7. பயிற்சி தொடங்குமுன் தசைகளை தளர்த்தி இயல்பாக மூச்சுவிட வேண்டும்.
8. மூச்சுப் பயிற்சியின்போது இருதய, நுரையீரல் நோயாளிகள் அதிக நேரம் மூச்சை இழுத்து, உள்நிறுத்தி ‘தம்’ கட்டுவது தவறு. ஆபத்தாகும்.
9. பயிற்சி முடிந்ததும் உடனே எழுந்து வேறு வேலை செய்வது நல்லதல்ல. குறைந்தது பத்து நிமிடம் ஓய்வு தேவை. விரும்பினால் சாந்தி யோகம் செய்யலாம்.
10.பயிற்சிகள் முடிந்த பிறகு நடைப்பயிற்சி மேற்கொள்ளலாம்.
11.இளைஞர்கள் விளையாடுவதற்கு முன் இப் பயிற்சிகளை ஒரு ஆரம்ப
தயார் நிலை (Warm up) பயிற்சியாக செய்வது சிறந்த பலனைத் தரும்.

Thursday, February 13, 2014

யோகாசனம்

                                                                  யோகாசனம்

       யோகம்  என்பதற்கு  பல  பொருள்  உள்ளது  அவைகளில்  அதிர்ஷ்டம், உயர்ச்சி, தகுதி, பலன், வரம் என்பது சில. ஆனால் நாம் அதிர்ஷ்டம் என்பதை மட்டும் அதிகமாக பயன்படுத்துகிறோம். உண்மையில் யோகம் என்பற்கு ஒருங்கிணைப்பு, நற்சேர்க்கை என்பதே மிகச்சிறந்த பொருள் ஆகும்."நம் அவல குணங்களை நீக்கி பலவித யோகத்தால் நற்கதி அடைவதை யோகம்" என்பார் கீதையில் கிருஷ்ணன். யோகா செய்வது எப்படி என்ற கேள்விக்கு ஒரே வரியில் பதில் சொல்வது மிகக் கடினம். ஆசனம் என்பதற்கு அமர்தல், இருக்கை, உட்காருதல் என்று பொருள் கொள்ளலாம். யோகத்தை அடையச் செய்யப்படும் ஆசனம் யோகாசனம் ஆகும்.

யோகம் பல வகைப்படும். அவைகளை அஷ்டாங்கயோகம் என்பார் யோகி பதஞ்ஜலி முனிவர்.

சிவயோகம் - அஷ்டாங்க யோகங்கள்
அஷ்ட என்றால் எட்டு என்று பொருள்.
அஷ்டாங்க யோகங்களாவன

   1. இயமம்:
      நித்திய பிரார்த்தனைகள், உயிர்களிடத்தில் அன்பு, சத்தியம் கடைபிடித்தல், கொல்லாமை, புலன் அடக்கம், ஆசை இல்லாமை.
   2. நியமம்:
      இது கிரியை எனப்படும். தூய்மை, நிறைவு, நோன்பு, கல்வி, அபயம் அடைதல்.
   3. ஆசனம்:
      யோகாசன முறைகள்
   4. பிராணயாமம்:
      மூச்சை கட்டுப்படுத்துதல் அல்லது நெறிப்படுத்தல்
   5. பிரத்தியாகாரம்:
      உள்ளத்தை கண்டபடி அலையவிடாமல் தடுத்து காத்தல்
   6. தாரணை:
      மனதை தியான யோக்கியமானதோர் ஸ்தானத்திலிருத்துவதாம். ஹ்ருதயமும் ப்ரஹ்ம ரந்திரமுமே தியான யோக்கிய ஸ்தானங்களாம்.
   7. தியானம்:
      ஒன்றையே நினைதது எண்ண உருவாக்கத்தை கட்டுப்படுத்தல்
   8. சமாதி:
      உயிர் பிரம்மத்துடன் கலந்த நினைவற்ற இன்ப நிலை

இதையே

இயம நியமமே எண்ணிலா ஆசனம்
நயமுறு பிராணாயாமம் பிரத்தியா காரம்
சயமிகு தாரணை தியானம் சமாதி
அயமுறும் அட்டாங்க மாவது மாமே.
-- திருமூலர் - திருமந்திரம்.10 பா.542

என்று திருமூலர் அஷ்டாங்க யோகத்தைப்பற்றி கூறுகிறார். இவைகளின் பொருள் குண்டலினி யோகத்தில் சிறுது வேறுபாடு இருக்கும்.

இவ்வகை எட்டு யோக வகையில் ஆசனம் என்பது மூன்றாவது உள்ளது.யோகிகளுக்கும். தவம் செய்வோருக்கும் மட்டுமல்லாது இல்லற வாசிகளுக்கும் இவைகள் மிக பயன்படுபவை ஆகும்.

யோக முறைகள்

    * இராஜயோகம்:
      ஒரே இடத்தில் அமர்ந்து செய்ய்படும் தியானம்.
    * ஹடயோகம்:
      உடலை பலவகை இருக்கைகளுக்கு உட்படுத்தி மனதை பண்படுத்தல்
    * கர்மயோகம்:
      பலனை எதிர்பாராமல் கர்மங்கள், தொண்டுகள் செய்து வாழ்தல்
    * ஞானயோகம்:
      மெய்ஞான அறிவால் இறைவனை அறிந்து அதன் படி நடத்தல்
    * பக்தி யோகம்:
      இறைவன் மேலும் உயிர்களின் மேலும் அளவுகடந்த பக்தியும் அன்பும் வைத்தல்
    * மந்திர யோகம்:
      மந்திர ஜபத்தால் சக்தியை உரு கொடுத்தல்
    * கீதா யோகம்:
      இறைவனை நினைத்து உருகி பஜனையால் ஆராதனை செய்தல்

பலவித யோக முறைகளில் ஹடயோகம் என்பதே யோகாசனம் எனப்படும். ஆக யோகம் என்பதில் ஒரு சிறு பகுதியே யோகாசனம்ஆகும்
சுவாசத்தை அடக்கியாளும் அப்பியாசம்

    ஒரு சுத்த ஆசனத்தின் மீது அமர்ந்துகொண்டு சுகாசனமாக இருந்து மார்பு முதுகு கழுத்து தலை இவைகள் கோணலின்றி ஒழுங்காக நிறுத்தி சுவாசத்தையெல்லாம் வெளியே தள்ளவும் . முழுவதும் வெளியே விட்ட சுவாசத்தை மீண்டும் சீறாக உள்ளே வாங்கி வயிற்றையும்  மார்பையும் நிரப்பவேண்டும். அப்படி நிரப்பிய சுவாசத்தை கொஞ்சமும் உள்ளே இல்லாமல்  முழுவதும் வெளியே தள்ளிவிடவேண்டியது. இவ்வாறு பதினாறுதரம் சுவாச அப்பியாசம் செய்யவும். இதுபோல் காலை மாலை இருவேளையாக ஒரு மண்டலம் வரையில் செய்ய சுவாசப்பையும் மார்பும் மற்ற தேக ஆதியந்தமும் சுவாசதாரை யிருப்பிடமும் சுத்தமாகும். இரத்த சுத்ததமுண்டாகும். சரீரத்திலும் மார்பிலும்  பலம் அதிகரிக்கும். சோம்பல் இல்லாமற்படி சுறுசுறுப்பையும் உண்டாக்கும்.

சுவாசகலை மாற்றுதல் அப்பியாசம்

  
சுத்த ஆகாய சுத்தமான காற்றுள்ள இடத்தில் சுத்தமான ஆசனத்தின்மீது சுகாசனமாவது சித்தாசனமாவது போட்டு அமர்ந்து இடை முதுகு கழுத்து தலை முதலியவை கோணல் வலைவின்றி ஒழுங்காக நிறுத்தி சற்றுநேரம் ஒன்றும் செய்யாமல் நினையாமல் சும்மாயிருக்க வேண்டியது. மனதை அமைதி நிதானமாக்கிகொண்டு  வலப்புறத்து நாசியை பெருவிரலினால் அடைத்துகொண்டு இடப்புறத்து நாசியினால்  கூடியவரையில் நிதானமாக காற்றினை உள்ளிழுத்துப் பூசித்துப் பிறகு கணப்பொழுதும் நிறுத்தாமல் உடனே இடப்புறத்து நாசியை முடிகொண்டு வலப்புறத்து நாசியினால் உள்ளே வாங்கிய சுவாசம் முழுவதையும் வெளியே செலுத்திவிட வேண்டும். இதுபோலவே பின்பு இடப்புறத்து நாசியை முடிகொண்டு வலப்புறத்து நாசியினால் சுவாசத்தை ஏற உள்ளேயிழுத்து  வலப்புறத்து நாசியை முடிகொண்டு  சுவாசம்முழுவதையும் வெளியே தள்ளிவிடவேண்டும். சற்று நேரம் எதுவும் செய்யாமற்படி சும்மா யிருக்கவேண்டும். பிறகு முன்போலவே முச்சையிழுத்து வெளியேவிடவேண்டியது. இதுபோலவே பதினாறுமுறை செய்யவேண்டும். இவ்விதமாக ஒரு மண்டலம் செய்துவர நரம்புத்தாரைகள் சுத்தமாகும். சுவாச ஓட்டம் சிக்கலின்றி  ஏற்றத்தாழ்வின்றி சுத்தமாக நடக்கும். சரீரம் பலப்படும். மனமும் ஆரோக்கியமாக உற்சாகமாக இருப்பதாக தோன்றும். இவை பிராணயாமத்துக்கு முதல் அடிப்படை சாதனமாமகும்.






 

Wednesday, August 28, 2013

எண்ணத்தின் சக்தி





எண்ணத்தின்  சக்தி

 எண்ணத்தின்  சக்தியால் மனிதன் எண்ணிய  படியேயாகிறான்; அடைகிறான்; நடக்கிறான்; நடத்துகிறான் என்றால் முதலாவது எண்ணம் என்பது என்ன என்பதையும்  சக்தியென்பது என்ன என்பதையும் எண்ணியபடியே ஆகிறேன் ; அடைகிறேன்; பிறர்மாட்டு நடத்துகிறான் நடத்திகாட்டுகிறான் என்பது எப்படியென்பதையும் ஆராய்ந்து  அறிந்து தெளிவோமானால்  அப்போது நாம் எண்ணியபடியே பகீர்முகமாக நாமே நடத்தவும் ஆகும்.    அந்த எண்ணங்கள் மின்சார சக்தியைப்போல் நம்மிடம் பிரதிபலிக்குமானால், அப்போது அந்தசக்தியின் தத்துவலாபத்தை நாமடைவதுடன் பிறருக்கும்  நன்மை  பயக்கும்படி செய்யமுடியும் ஆனபடியால் எப்போதும் நமது இருதயத்தில்  கெட்ட  எண்ணங்களை அப்புறப்படுத்தி சுத்த இருதயமாகவும் செய்துக் கொள்ள வேண்டியது இன்றியமையாததாகும்.
   
   நமக்கு வேண்டிய சித்தும் சித்தியும் எண்ணத்துள்ளேயே அடங்கியிருக்கிறது அதன் இரகசியம் இன்னது என்று நாம் தெரிந்து கொள்வதில்லை அப்படி தெரிந்துகொள்வோமானால் அப்போது அந்த சித்தத்தை இருப்பிடமாக கொண்டேயெழும் எண்ணமானால் கடவுள் நமக்கு கொடுத்த ஒரு அரும்பெரும் கருவியாகும் அதன் முலமாகதான் நாம் நன்மையடையவும் பிறருக்கு நன்மை செய்யவும் முடியும் எண்ணம் கெட்டுவிட்டால்  அதற்கு தக்கவாறு சொல்லும் காரியமும் கெட்டுவிடும் முதலாவது  எண்ணும் எண்ணங்களையே அதிஜாக்கிறதா வென்று அறியவேண்டும்.

 கர்த்தாவானவன் தனக்கு வேண்டியதை முதலாவது சிந்திக்கிறான். இரண்டாவது எண்ணமாக்கி யெண்ணுகிறான். மூன்றாவது அதை வெளியே பிரயோகப்படுத்துகிறான் கெட்டஎண்ணம் இருக்கிறவனுக்கு ஒருபோதும் இஷ்டசக்தி அடைய முடியாது.
    
  நல்ல எண்ணம் உண்டாவதற்கு முதலாவது மனம் நல்ல மனமாகவேண்டும் மனம் நல்லமனமாவதற்கு மனம் சாந்த நிலையை அடைய வேண்டும் சாந்த நிலையை அடைந்த மனமே சர்வ காரியத்திற்கும் காரிய சக்தியாயிருக்கிறது.   சாந்த  நிலையை அடைந்த மனம் எதுவோ அதுவே தெய்வ நிலையை அடைந்த மனம் ஆகிறது. தெய்வ நிலையை அடைந்த மனம் எல்லாம் செய்யவல்ல சித்தாகிறது.
   
  மனம் எப்போதும் சுழன்றுக் கொண்டிருக்கும் தன்மையது அது சில வேலையில் சுறைக் காற்று போலவும் இயங்குகின்றது இங்ஙனம் காற்றைப்போலச் சுழன்று கொண்டிருக்கும் மனம் நினைவுகளின் வடிவாக அமைந்துள்ளது. மனம் புத்தி சித்தம் அகங்காரம் என்னும் அந்தக்கரணங்கள் நான்கினுள்ளும் மனத்தை முதற்கண் நிருவியிறுப்பது கூர்ந்துவுணரத்தக்கது ஏனைய முன்றும் மனத்தின் வெவ்வெறு நிலைகளாகவே நினைக்கப்படுகின்றன. மனத்தின் தொழில் நினைத்தல் என்க அதனாலே அது நினைவின் வடிவமானது என்று கூறுகிறோம். உபநிஷதங்களும் மனம் சிந்தித்தலையே உருவகமாக உடையது என்கிறது. சிந்தித்தலையுடைய மனதிற்குச் சிந்தை என்பது ஒரு பெயர். மனம் நினைவே வடிவமாக இருப்பினும் நினைவுகள் தாம் ஒவ்வொருவருக்கும் பலப்பல உளவே அது போலப் பல அல்ல ; எல்லா நினைவுகளும் எழுதற்கறிய நிலையானது ஒரு வல்லமை சக்தியாகும். அவ்வல்லமை நினைவுகளாலேயே  உரம்பெறத்தக்கது.

    நினைவுகள் முற்றும் அடங்கிவிடுங் காலத்து மனமும் அடங்கியதாகும் அதுவே மனம் இறந்த நிலை அமைதிநிலை சாந்தி நிலை என சித்தர்கள் கூறுகின்றனர். இதுவரையிலும் மனமென்ப தின்னதென்பதையும்  மனதின் சக்தி இத்தகைய தென்பதையும் எண்ணம் என்பது இன்னதென்பதையும் எண்ணத்தின் சக்தி இத்தகைய தென்பதையும் அறிந்து கொண்ட நாம் அந்த மனதை அடக்கியாளும் மார்கத்தையும் சக்தி பூர்வமாக்கும் மார்கத்தையும் பிரயோகப்படுத்தும் மார்கத்தையும் அறிந்துகொள்ள வேண்டியது அவசியமாகும்.