Friday, February 27, 2015

சித்த மருத்துவம்




மஞ்சளின் மருத்துவ பலன்கள்
              
           நாம் ஏன் உணவில் கொஞ்சமேனும் மஞ்சள் சேர்த்துக் கொள்ள வேண்டும்,  மஞ்சளின் மருத்துவ குணங்கள் நம்மில் எத்தனை பேர் தெரிந்து வைத்திருக்கிறோம்.  மஞ்சளுக்கு பல மருத்துவ குணங்கள் உண்டு.  அதில் மிக சிறப்பானது மஞ்சள் கிருமி நாசினியாக பயன்படுவது,

  வயிற்றின் உள்ளே உள்ள கிருமிகளை விரட்டுவதில் மஞ்சளுக்கு நிகர் மஞ்சள் தான். சிறு குழந்தைகளுக்கு ஒரு சிட்டிகை அளவு மஞ்சள் துளை, வேப்பங் கொழுந்துடன் வாரா வாரம் ஒரு முறை அரைத்துக் கொடுத்தால், வயிற்றில் பூச்சிகள் இருக்காது.

  மேலும் சிறு குழந்தைகளுக்கு வரும் சளி, இருமலுக்கு பாலைக் கொதிக்க வைத்து அதில் சிட்டிகை மஞ்சள் துாள் போட்டு, சர்க்கரை சேர்த்து குடிக்கக் கொடுத்தால், சளி, இருமல் தொல்லை இருக்காது.  வறட்டு இருமல், மற்றும் சளி இருமலுக்கு பாலை கொதிக்க வைத்து அதில் சிட்டிகை மஞ்சள் துாள் போட்டு, சர்க்கரை சேர்த்து குடிக்கக் கொடுத்தால், சளி, இருமல் தொல்லை இருக்காது. வறட்டு இருமல், மற்றும் சளி இருமலால் இரவில் துாங்காமல் அவதிப் படுவோரும் பாலில் மஞ்சள் துளைப் போட்டு கொதிக்க வைத்து பருகினால் இருமல் உடனே நின்றுவிடும்,
     
 இந்தியாவில் பல புற்றுநோய் வகைகள் இருந்தாலும் சருமம், பெருங்குடல் புற்று நோய் கொஞ்சம் குறைவாக இருப்பது நாம் அன்றாடம் உணவில் மஞ்சள் சேர்த்துக் கொள்வதால் தான். 
                
          நாம் அன்றாடம் உணவில் சேர்க்கும் மிளகாய் பொடி, அத்தனை நல்லதல்ல. ஆனால் அதனுடன் கொஞ்சம் மஞ்சள் சேர்த்து சாம்பார் பொடி முறியடித்து விடும்.  மஞ்சள் துாள் அன்றாட உணவில் சேரும்போது புற்று நோய் கூட அண்டாது.
  
  நாம் அன்றாடம் செய்யும் சாம்பார், ரசம் இவைகளில் மஞ்சள் துாளை சேர்த்து விட்டு, அதனுடன் கூடவே பொரித்த சிப்ஸ், வடை, அப்பளம் என்றெல்லாம் காம்பினேசனில் சாப்பிட்டால் உணவு உடனே ஜீரணமாகிவிடும். 

   விரலி மஞ்சளில் இருக்கும் குர்குமின் சத்தில் உள்ள பாலிபீனால்கள் புற்று நோய் செல்களின் வளர்ச்சியைக் குறைப்பதிலும், நோய் வராமல் தடுப்பதிலும் பெரும் பங்கு அளிக்கின்றன என்று ஆய்வில் கண்டு பிடித்துள்ளார்கள்.

   மஞ்சள் வயோதிகத்தில் வரும் நினைவு தடுமாற்ற நோய், கீமோதெரபி தரும் போது ஏற்படும் பக்க விளைவுகள் இவற்றை தடுக்கின்றது.  சிறு வயது முதலே பெண் குழந்தைகள் முகத்தில் மஞ்சள் பூசிக் குளித்து வந்தால், முகம் பொன்னென மின்னும்.  முகத்தில் தேவையற்ற முடிகள் வளராது.
    
  மஞ்சளில் உள்ள குர்குமின் சத்து புற்றுநோய் அண்டவிடாமல் தடுக்கும்.  ஏற்கனவே இருந்தாலும் அதன் வீரியத்தைக் குறைக்கும்.  உடலில் உள்ள உள் மற்றும் வெளிக் காயங்களை ஆற்றும், வீக்கத்தைக் குறைக்கும்.

  அசைவ சாப்பாட்டில் மஞ்சள் சேர்த்து சமைத்தால் விரைவில் ஜீரணமாகும்.  தவிர மஞ்சள் கிருமி நாசினி என்பதால் இறைச்சியில் ஏதும் கிருமிகள் இருந்தாலும் அழித்து விடும்,
   
 மஞ்சள் ஒரு தடுப்பு மருந்து, வாசனையூட்டி, ஒரு வலி நிவாரணி, ஒரு இணை மருந்து என்று சொல்லிக் கொண்டே போகலாம்.  மஞ்சளை உணவில் பயன்படுத்துங்கள், பயன் பெறுங்கள்.



தோல் நோய்களைப் போக்கும் கஸ்தூரி மஞ்சள்






 கஸ்தூரி மஞ்சள் சாதாரண மஞ்சளை விடச் சற்று மணம் அதிகமுள்ளது. தோல் நோய்களைப் போக்கும் தன்மையைப் பெற்றது. அடிபட்ட வலிகளுக்கும், மூக்கில் வரும் நோய்களுக்கும், குன்ம வயிற்று வலிக்கும், கட்டிகள் உடையவும், தேமலைப் போக்கவும் கஸ்தூரி மஞ்சள் பயன்படுகிறது. மேலும், இது மணம் தரும் வாசனைப் பொடிகள் தயாரிக்கவும், குளிக்க உதவும் தைலங்களில் சேர்க்கவும் பயன்படுகிறது. இளம் பெண்களில் சிலருக்கு முகத்தில் ஆண்களைப் போல மேலுதட்டின் மீது முடி வளர்வதுண்டு. இதைப் போக்க கஸ்தூரி மஞ்சளைப் பொடித்து அல்லது குழைத்து முகத்தில் பூசிக் கழுவி வந்தால் முடி வளர்வது தடைப்படும். முகத்தில் பொலிவு ஏற்படும்.

* பெண்கள் கஸ்தூரி மஞ்சள் கிழங்கைப் பொடித்து, உடல் முழுவதும் பூசி, சற்று நேரம் கழித்து குளித்தால் தோல் நோய்கள் நீங்கும். கரப்பான் புண்கள் விரைவில் குணமாகும்.

* ஆண்கள் கஸ்தூரி மஞ்சளை முகத்தில் பூசக் கூடாது. முடி வளருவது அங்கங்கு தடைப்படும்.

* கஸ்தூரி மஞ்சளை இடித்துத் தூள் செய்து துணியில் சலித்து எடுக்க வேண்டும். இதில் ஐந்து குன்றிமணி அளவு தேனில் கலந்து சாப்பிட்டால் குன்ம நோய்கள், மற்றும் வயிற்று வலி ஆகியவை குணமாகும்.

கஸ்தூரிமஞ்சள்           50  கிராம்
பூவரசன்வேர்             30  கிராம்
வெள்ளெருக்கன்வேர்      25 கிராம்
சிறுநாகப்பூ               15  கிராம்
வெடியுப்பு                10  கிராம்
புனுகு                                         10  கிராம்

இவற்றை நீர் தெளித்து மை போல அரைக்க வேண்டும். சுத்தமான வெள்ளைத் துணியை எடுத்து, அதில் அரைத்து வைத்ததைப் பரவலாகப் பூச வேண்டும். இத் துணியை நன்றாய்க் காய வைத்து எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
தேவைப்படும் போது சுருட்டு சுற்றும் அளவுக்குத் துணியைக் கிழித்து எடுக்க வேண்டும். கிழித்த துணியைச் சுருட்டுப் போல் சுருட்டி நெருப்பில் காட்டினால் புகை வரும். அப்புகையை மூக்கினால் சுவாசிக்க வேண்டும். இதைக் காலை, மாலை இரு வேளைகளும் சுவாசித்தால் மூக்கு சம்பந்தமான எல்லா நோய்களும் குணமாகும்.

* கஸ்தூரி மஞ்சளை வெங்காயச் சாற்றில் குழைத்துக் கட்டிகள் மீது பூசினால் கட்டிகள் உடையும்.

* கஸ்தூரி மஞ்சளை அரைத்துச் சூடு படுத்தி அடிபட்ட இடத்தில் தடவினாலும், கட்டினாலும் வீக்கமும் வலியும் குறையும்.

* கஸ்தூரி மஞ்சள் தூளைத் தேங்காய் எண்ணெயில் கலந்து அடிபட்ட புண் அல்லது சிரங்குகளுக்கு மேல் பூசினால் விரைவில் குணமாகும்.

* சாதாரண மஞ்சளுக்குப் பதிலாக, பெண்கள் கஸ்தூரி மஞ்சளை இடித்துத் தூளாக்கியோ கல்லில் அரைத்தோ முகத்திற்குப் பூசி வந்தால், முகத்தில் பொலிவு ஏற்படும். முகப் பருக்கள், தேமல்கள் ஆகியவை வாராது.