அகத்தியர் ஞானம் – 30
பாடல்: 1
மெய்ஞான குருபரனைப் பூசைபண்ணு
வித்தைந்து சற்குருவை நிதமும் போற்று
கையாற மனமாற ஞானம் சொல்லு
காரமாங் குருபதத்தைக் கருதிப்பாரு
வையமெல்லாம் கொண்டாட கருவைச் சொல்வேன்
மதிகெட்டு விள்ளாதே மகிழ்ந்திடாதே
பொய்யாத உபதேச குருவைப் போற்றி
புகழாக பன்னிரெண்டு வருசங்காரே.
பொருள்
மெய்ஞான
குரு முருகனை வணங்கு. அகாரா உகார மகார நாத விந்து எனப்பட்ட ஐந்து வித்துக்களை உருவாக்கிய
சற்குருவான தட்சணாமூர்த்தியை தினமும் வணங்கு. நான் சொல்லிக் கொடுத்த ஞானத்தின் செய்முறைகளை
மறைக்காமல் மனமாறச் சொல்லு பாடலின் பொருள் தெரியாவிட்டால் ஓம்கார குருவான என்னிடம்
கேள். இந்த உலகம் கொண்டாடும் வகையில் கனவு நிலையில் பொருள் சொல்லுவேன். ஆணவம் கொண்டு
மகிழ்ந்து பேசாதே. உங்களுக்குப் பொய்யான உபதேசம் செய்யாத பொய்த்துப் போகாத உபதேசம்
செய்யும் குருவிடம் 12 ஆண்டுகள் அவர் புகழ் சிறக்க ஞானம் கற்றுக்கொள்.
பாடல் 2:
கார்த்தாக்காலோரெழுத்து
வழியும் சொல்வார்
கருச்சொல்வார்
குருச்சொல்வார் களங்கமற்ற
பார்த்தாக்காற்
சித்திமுத்தி யிரண்டுஞ் சொல்வார்
பரிவாக வாலை மூன்றெழுத்துஞ்
சொல்வார்
சேர்த்தாக்காற்
லெட்டோடே யிரண்டும் சொல்வார்
சிவஞ் சொல்வார்
நாலுக்குமிடமும் சொல்வார்
பூத்தாக்காலாயிரத்தெட்டிதழின்
வாசி
பூங்கமலத் திருவடியை
பூசை செய்யே
பொருள்:
உண்மையான குருவிடம்
சரணடைந்து கற்றுக்கொள். அவரிடம் களங்கமற்று இருந்து கற்றுக்கொள். அவர் உனக்கு கற்றுத்
தருபவைகள்.
Ø
ஓம்
என்ற ஓர் எழுத்தின் பொருள், அதன் மறைப்பு, கருப்பொருள்
Ø
குரு
என்ற முப்பூ என்ற சாகா மருந்து செய்முறை
Ø
அமானுஷ்ய
சக்திகளான “அஷ்டமா சித்திகள்” அடையும் வழி
Ø
முக்தி
அடையும் வழி
Ø
வாலை
மூன்று எழுத்து என்ற அகார, உகார, மகார பற்றிய விளக்கம்
Ø
எட்டு
உடன் இரண்டு சேர்க்கும் வழி
Ø
சிவ
யோகம் செய்யும் முறை
Ø
வாசி
யோகத்தில் சகஸ்ஹார தளத்தில் 1008 இதழ் தாமரை ஒளியைக் காட்டுவார். இத்தகைய வாசியின்
தாமரை மலர்ப் பாதங்களைப் பூசை செய்.