அஞ்சனம்
சித்தான அஞ்சனந்தான் சொல்லக் கேளு சிறப்பான மூலிகையொன் றுரைப்பேன் மைந்தா, முத்தான ஆடாதொடை மூலிகையப்பா முதன்மையா மதினுடைய கிழங்கைக்கண்டு, பத்தான யென்பேதமட்டுஞ் செய்து பண்பான வதினுடைய கிழங்கை வாங்கி, வித்தான குழியம்மி தன்னிலப்பா விதமான கிழங்கதிலே விராகன் போடே.
போடப்ப வதினுடைய பழந்தானையா பொங்கமுடன் காறோசினைப்புங் கூட்டி, ஆட்டப்பா விளக்கிட்டுச் சாரை நெய்யா லன்பாக வெட்டுண்ட சிரசினோட்டில், கூட்டப்பா மையெறித்தெடுத்துக் கொண்டு கூர்மையாம் சற்குருவின் பாதம் போற்றி நீட்டப்பா முக்காலும் பூசை செய்து நினைவாக புற்றினிட தேனி லாட்டே.
ஆட்டையிலே குழியம்மி வெடித்துக் காணுமப்பனே பாதாளஞ் ஜெகமாய் தோணும் கூட்டையிலே வழித்தெடுத்துச் சிமிழில் வைத்துக் குருவான கணபதிக்குப் பூஜை செய்து, நிட்டையிலே யஞ்சனாதேவியது பார்க்கும் நிச்சயமாய் பூசை செய்து கண்ணிற்றோன்றுங் கனிவாகக் கிண்டியதை யெடுத்துக் கொள்ளே.