Sunday, January 27, 2013

பாதாளஅஞ்சனம்

அஞ்சணம் என்றால் பொதுவாக பெண்கள் கண்களுக்கு இட்டுகொள்ளும் மையை குறிப்பிடலாம். ஆனால் வேறு சில அஞ்சனங்களும் இருக்கிறது இவைகள் மாந்திரீக வேலைகளுக்கு பயன்படுகிறது. இவற்றில் ஒன்றுதான் இந்த பாதாள அஞ்சணம்.

செய்முறை : குப்பைமேனி செடியின் வேர், வெள்ளெருக்கன் வேர், வெள்ளை விஷ்னுகாந்தி வேர், ◌வெள்ளைச் சாரணை வேர், வெள்ளைக் காக்கணம் வேர் இவை ஐந்தையும் முறைப்படி காப்புகட்டி சாபம் போக்கி ஆணிவேர் அறாமல் பிடுங்கிவந்து, நிழலில் உலர்த்தி தீயில் கருக்கி வஷ்திரகாயம் செய்து வைத்துகொண்டு ஒரு கோட்டாணைப் பிடித்து உரோமம்,குடல் நீக்கி குழித்தையலம் எடுத்து ஒரு கல்வத்திலிட்டு முலிகையுடன் தைலத்தை சேர்த்து இரண்டு ஜாமம் (6 மணி நேரம்) அரைக்கவேண்டும்.பிறகுபுனுகு,கோரோசணம்,பச்சைகற்பூரம்,குங்குமப்பூ,கஸ்துரி இவைகளை வகைக்கு 1 கிராம் வீதம் சேர்த்து மீண்டும் ஓரு ஜாமம் அரைத்தால் மை பக்குவம் அடையும். பிறகு இந்த மையை வெள்ளிச் சிமிழிள் பத்திரப்படுத்தவும்.

பிரயோகம் :இந்த மையை கொஞ்சம் எடுத்து, வெற்றிலை ஒன்றில் தடவி விளக்கின் ஒளியில் பார்த்தால், பூமிக்குள் இருக்கும் பொருள்கள் யாவும் தெரியும். நவரத்தினம்,தங்கம்,வெள்ளி முதலிய உலோகங்கள் இருப்பதைக் காணலாம் தண்ணீர் ஊற்று,தண்ணீருக்குள் இருக்கும் பொருள் முதலியனவும் தெரியும். இது பாதாள அஞ்சனம் என பெயராதலால் வேறு உபயோகத்திற்கு பயன்படாது.

மோடிவித்தை

இது என்ன பாதாளமோடி எங்களுக்கு நரேந்திர மோடியைத்தான் தெரியும் குஜராத்தின் முதல்வர் என்று .மோடி என்பது மாந்திரீகர்கள் தங்களில் யார் சிறந்த மாந்திரீகன் என்று தங்களுக்குள் போட்டி வைப்பார்கள் அந்தபோட்டியில் யார் வெல்கிறார்களோ அவர்களுக்கு சில வெகுமதியும் பாராட்டும் அளிப்பார்கள்

ஏறுசிங்கி

 ஏறுசிங்கி என்ற மூலிகை ஒன்று இருக்கிறது. இந்த மூலிகையின் தண்டுகளில் புலியின் நகங்களை போன்று முட்கள் ஏறுவரிசையில் வலைந்து காணப்படும். இந்தவகை மூலிகைகள் பெரும்பாலும் மலைகளில் காணப்படும். குறிப்பாக தமிழகத்தில் கொல்லிமலை மற்றும் சதுரகிரியில் இருக்கின்றன.