சுவாசத்தை அடக்கியாளும் அப்பியாசம்
ஒரு சுத்த ஆசனத்தின் மீது அமர்ந்துகொண்டு சுகாசனமாக இருந்து மார்பு முதுகு கழுத்து தலை இவைகள் கோணலின்றி ஒழுங்காக நிறுத்தி சுவாசத்தையெல்லாம் வெளியே தள்ளவும் . முழுவதும் வெளியே விட்ட சுவாசத்தை மீண்டும் சீறாக உள்ளே வாங்கி வயிற்றையும் மார்பையும் நிரப்பவேண்டும். அப்படி நிரப்பிய சுவாசத்தை கொஞ்சமும் உள்ளே இல்லாமல் முழுவதும் வெளியே தள்ளிவிடவேண்டியது. இவ்வாறு பதினாறுதரம் சுவாச அப்பியாசம் செய்யவும். இதுபோல் காலை மாலை இருவேளையாக ஒரு மண்டலம் வரையில் செய்ய சுவாசப்பையும் மார்பும் மற்ற தேக ஆதியந்தமும் சுவாசதாரை யிருப்பிடமும் சுத்தமாகும். இரத்த சுத்ததமுண்டாகும். சரீரத்திலும் மார்பிலும் பலம் அதிகரிக்கும். சோம்பல் இல்லாமற்படி சுறுசுறுப்பையும் உண்டாக்கும்.
சுவாசகலை மாற்றுதல் அப்பியாசம்
சுத்த ஆகாய சுத்தமான காற்றுள்ள இடத்தில் சுத்தமான ஆசனத்தின்மீது சுகாசனமாவது சித்தாசனமாவது போட்டு அமர்ந்து இடை முதுகு கழுத்து தலை முதலியவை கோணல் வலைவின்றி ஒழுங்காக நிறுத்தி சற்றுநேரம் ஒன்றும் செய்யாமல் நினையாமல் சும்மாயிருக்க வேண்டியது. மனதை அமைதி நிதானமாக்கிகொண்டு வலப்புறத்து நாசியை பெருவிரலினால் அடைத்துகொண்டு இடப்புறத்து நாசியினால் கூடியவரையில் நிதானமாக காற்றினை உள்ளிழுத்துப் பூசித்துப் பிறகு கணப்பொழுதும் நிறுத்தாமல் உடனே இடப்புறத்து நாசியை முடிகொண்டு வலப்புறத்து நாசியினால் உள்ளே வாங்கிய சுவாசம் முழுவதையும் வெளியே செலுத்திவிட வேண்டும். இதுபோலவே பின்பு இடப்புறத்து நாசியை முடிகொண்டு வலப்புறத்து நாசியினால் சுவாசத்தை ஏற உள்ளேயிழுத்து வலப்புறத்து நாசியை முடிகொண்டு சுவாசம்முழுவதையும் வெளியே தள்ளிவிடவேண்டும். சற்று நேரம் எதுவும் செய்யாமற்படி சும்மா யிருக்கவேண்டும். பிறகு முன்போலவே முச்சையிழுத்து வெளியேவிடவேண்டியது. இதுபோலவே பதினாறுமுறை செய்யவேண்டும். இவ்விதமாக ஒரு மண்டலம் செய்துவர நரம்புத்தாரைகள் சுத்தமாகும். சுவாச ஓட்டம் சிக்கலின்றி ஏற்றத்தாழ்வின்றி சுத்தமாக நடக்கும். சரீரம் பலப்படும். மனமும் ஆரோக்கியமாக உற்சாகமாக இருப்பதாக தோன்றும். இவை பிராணயாமத்துக்கு முதல் அடிப்படை சாதனமாமகும்.