Tuesday, January 27, 2015

பைரவர் வழிபாடு





ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் வழிபாடு


   இவர் அமர்ந்த நிலையில் தன் மடியில் அஜாமிளா (பைரவியை) அமர்த்திக் கொண்டு ஒரு கரத்தில் அமுத கலசமும், ஒரு கரத்தில் சூலமும் கொண்டு வைர கிரீடமும் பட்டு வஸ்திரமும் அணிந்து தம்பதி சமேதராக காட்சி தருகின்றார். இவரை அஷ்டமி திதி மற்றும் பவுர்ணமி நாளில், வெள்ளி, செவ்வாய் கிழமைகளில் வணங்கினால் சகல சம்பத்தும், பொன் பொருளும் கிட்டும். ஸ்ரீபைரவருக்குப் பவுர்ணமிக்குப் பின்வரும் தேய்பிறை அஷ்டமியில் பஞ்ச தீபம் ஏற்றி வழிபட்டால் காலத்தினால் தீர்க்க முடியாத தொல்லைகள் நீங்கும். நல்லருள்கிட்டும். இலுப்பை எண்ணெய், விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், பசு நெய் இவற்றினை தனித்தனி  தீபமாக  அகல் விளக்கில் ஏற்றி வழிபட்டால் எண்ணிய காரியங்கள் நிறைவேறும் என்பது ஐதீகம்.

      வாழ்க்கையில் தரித்திரம் வராமல் காத்து செல்வச் செழிப்பை வழங்குபவர். ஸ்வர்ணாகர்ஷண பைரவரை  வடக்கு திசை நோக்கி அமர்ந்து வழிபடுவது சிறப்பு. திருவாதிரை நட்சத்திரத்தில் வழிபடுவதால் சிவனது அருள் செல்வம் கிட்டும். தாமரை மலர் மாலை, வில்வ இலை மாலை போடுவது சிறந்தது. தேய்பிறை அஷ்டமி திதிகளில் செவ்வாடை அணிவித்து, நெய் விளக்கு ஏற்றி, வடைமாலை சாற்றி, செந்நிற மலர்களைக் கொண்டு அர்ச்சித்து, வெள்ளைப் பூசணியில் நெய் தீபம் ஏற்றி வர நல்ல பலன் கிடைக்கும்.
   
      ஞாயிற்றுக்கிழமை மாலை ராகு கால நேரத்தில் பைரவருக்கு 11 நெய் தீபம் ஏற்றி விபூதி அல்லது ருத்ராபிஷேகம் செய்து, வடைமாலை சாற்றி சகஸ்ரநாம அர்ச்சனை செய்து வழிபட்டால் திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம்கூடும்.இவரை வழிபாடு செய்வதால் வறுமை, பகைவர்களின் தொல்லைகள், பயம் நீங்கி அவர் அருளால் அஷ்ட ஐஸ்வர்யங்களும், தன லாபமும், வியாபார முன்னேற்றம், பணியாற்றும் இடத்தில் தொல்லைகள் நீங்கி மனத்தில் மகிழ்ச்சியை பெறலாம். நம்பிக்கையுடன், பக்தியுடன் சொர்ணாகர்ஷண பைரவர் யந்திரத்தை வீட்டில் வைத்து தினந்தோறும் தூப தீபம் காட்டி வழிபட்டு வருவதுடன் தேய்பிறை அஷ்டமி திதியில் திருவிளக்கு பூஜை செய்து பலவிதமான மலர்களைக் கொண்டு பூஜித்து வணங்கி வந்தால் வீட்டில் செல்வச்செழிப்புஏற்படும்.

   வியாபாரிகள் கல்லாப் பெட்டியில் சொர்ண ஆகர்ஷண பைரவர், பைரவி சிலை அல்லது யந்திரம்,படம் வைத்து பூஜித்து வர கடையில் வியாபாரம் செழித்து செல்வம் பெருகி வளம் பெறுவார்கள். தினமும் பைரவர் காயத்ரியையும், பைரவி காயத்ரியையும் ஓதி வந்தால் விரைவில் செல்வம் பெருகும். வெல்லம் கலந்த பாயசம், உளுந்து, வடை, பால், தேன், பழம், வில்வ இலைகளால் மூல மந்திரம் சொல்லி  அர்ச்சனை செய்ய தொழில் விருத்தியாகும். ஸ்வர்ணகர்ஷண பைரவ அஷ்டகம் தனச் செழிப்பைத் தரும். வெள்ளிக்கிழமை, திங்கட்கிழமை இரண்டு நாட்களிலும் சந்தியா காலங்களில் படிப்பவர்கள் வாழ்க்கையில் வெற்றியையும், தன விருத்தியையும் அடைவார்கள்.  பவுர்ணமி அன்று  இரவு எட்டு மணிக்கு தீபத்தை ஏற்றி வைத்துக்கொண்டு பதினெட்டு முறை பாராயணம் செய்யவேண்டும்.

   இவ்விதம் ஒன்பது பவுர்ணமிகளில் பாராயணம் செய்தால் கண்டிப்பாக தன வரத்தை அடையலாம். நீண்ட நாட்களாக உள்ள  வறுமையிலிருந்து விடுபடலாம். ஒன்பதாவது பவுர்ணமியன்று அவலில் பாயசம் நைவேத்தியம் செய்யலாம். கார்த்திகை மாதம் தேய்பிறை அஷ்டமி பைரவருக்கு ஜென்ம அஷ்டமி ஆகும். கோரிக்கைகளை  நம்பிக்கையுடன் பைரவரிடம் வேண்டும் போது 30 தினங்களுக்குள் நிறைவேறுகிறது.

   சித்திரை - பரணி, ஐப்பசி - பரணி போன்ற மாதங்களில் வரக்கூடிய பரணி நட்சத்திரம்கால பைரவருக்கு விசேஷ நாள்கள் ஆகும். ஏனெனில் பரணி நட்சத்திரத்தில் தான் பைரவர் அவதரித்தார். எனவே பரணி நடசத்திரக்காரர்கள் பைரவரை வழிபட்டால் புண்ணியமாகும். பலனும் அதிகம் கிடைக்கும்.
தை மாதம் செவ்வாய்க் கிழமைகளில் பைரவரை வழிபட்டு விரதம் இருப்பது மிகுந்த பலன்களை கொடுக்கும். பைரவர் விரதம் எல்லா அஷ்டமிகளிலும் பைரவர் விரதம் இருக்கலாம். ஆனால் செவ்வாய்க்கிழமைகளில் அஷ்டமி இணைந்து வந்தால் அதைவிடச் சிறப்பான நாள் எதுவுமில்லை.
  குறைந்தபட்சம் 21 அஷ்டமிகள் தொடர்ந்து விரதம் இருக்க வேண்டும். அதிகாலையில்  நீராடி பைரவரை மனதில் நினைத்து வணங்கவேண்டும். பகலில் இரவில் கண்டிப்பாக சாப்பிடக்கூடாது. அன்று மாலை பைரவருக்கு வடை மாலை சாற்றி வழிபட வேண்டும். வசதி குறைந்தவர்கள் ஒரு தீபம் மட்டும் ஏற்றினால் போதும்

சிதம்பரத்தில் சொர்ண பைரவர்

   சிதம்பரம் நடராஜப் பெருமானுடைய சித்திர சபையில் கீழ்புறத்தில் வைக்கப்பட்டுள்ள சொர்ண பைரவ முர்த்தியின் பாதத்தில் சுமார் இருநுரு,முன்னுறு வருடங்களுக்கு முன் அப்போது வாழ்ந்த தில்லைவாழ் அந்தணர்கள் ஓர் செப்புத்தகட்டை அர்த்தஜாமப் பூஜையின் போது மந்திரங்கள் கூறி வைத்துவிட்டு வீட்டிற்கு சென்று விடுவார்களாம் மறுநாள் காலையில் வந்து பார்க்க பைரவப் பெருமானின் பேரருளால் அந்தச் செப்புத் தகடு சொர்ணத் தகடாக மாறி இருக்குமாம் பின் அதை விற்று வாழ்க்கையை இனிமையாக கழித்ததாகக் கூறப்படுகிறது. இக்காலத்திலும் இவரை அன்புடன் உள்ளம் உருகி வணங்கி வழிபட்டு வர சகல சௌபாக்யங்களும் கிட்டும் என்பதில் சிறிதும் சந்தேகம் இல்லை.

ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் தியான சுலோகம்

காங்கேய பாத்ரம் டமருகம்
திரிசுலம் வரம் கரை
ஸமசந்ததம் த்ரிநேத்ரம்
தேவயாயுதம் தப்தஸவர்ண
வர்ஷணம் ஸ்வர்ணா
கர்ஷணம் பைரவம்


ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் துதி

“ஸ்வர்ண கால பைரவம் த்ரிசுலயுக்த பாணி நம்
வேத ருப ஸாரமேல் ஸம்யுதம் மஹேச்வரம்
ஸ்மாச்ரி தேஷ ஸர்வதா ஸமஸ்தவஸ்து தாயினம்
மகீந்திரி வம்ச பூர்வ புண்ய ருபினம் ஸமாச்ரயே”
   
  மேற்கன்ட ஸ்வர்ணாகர்சண மந்திரத்தினை தில்லை வாழ் அந்தணர்கள் அறுபத்து நான்காயிரம் தடவைகள் பைரவர் முன் கூறி வைத்துவிட்டு செல்லும் செப்புத் தகடே பொன் தகடாக மாறி அவர்களுக்கு வளமையை அள்ளித் தந்ததாகக் கூறப்படுகிறது.

ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் மூல மந்திரம்


”ஏக சஷ்டி அஷரம் மந்திரம் லகு சித்தப்ரதாயகம்

ஏக சஷ்டி சதம் குர்யாத் ஜபம் மந்த்ரஷ்ய சித்தியே.”

(வேறு மூல மந்திரம்)

ஓம் ஏம் ஐம் க்லாம் க்லீம் க்லூம்
ஹ்ராம் ஹ்ரீம் ஹ்ரூம்
சகவம்ஸ ஆபதுத்தோறணாய
அஜாமிள பந்தநாய லோகேஸ்வராய
ஸ்வர்ணாகர்ஷணபைரவாய
மமதாரித்திரிய வித்வேஷணாய
ஓம்ஸ்ரீம் மஹா பைரவாய நமஹ




    ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் யந்திரம்

Saturday, April 26, 2014

தமிழ் வழி மந்திரங்கள்



துாப தீபம்

பெரும்புலர் காலை மூழ்கி பித்தர்க்குப் பத்தராகி

அரும்பொடு மலர் கொண்டு ஆர்வத்தை உள்ளே வைத்து

விரும்பிநல் துாபதீபம் விதியினால்இட வல்லார்க்குக்

கரும்பினில் கட்டி போல்வார் கடவூர் வீரட்டனாரே




கற்பனைக் கடந்த சோதி கருணையே உருவமாகி

அற்புதக் கோலம் நீடி அருமறைச் சிறத்தின்மேலாம்

சிற்பர வியோமமாகும் திருசிற்றம்பலத்துள் நின்று

பொற்புடன் நடம் செய்கின்ற பூங்கழல் போற்றி போற்றி




ஒசை ஒலிஎலாம் ஆனாய் நீயே

   உலகுக்கு ஒருவனாய் நின்றாய் நீயே

வாசமலரெலாம் ஆனாய் நீயே

   மலையான் மருகனாய் நின்றாய் நீயே

பேசப்பெரிதும் இனியாய் நீயே

   பிரானாய் அடி என்மேல் வைத்தாய் நீயே

தேச விளக்கெலாம் ஆனாய் நீயே

   திருவையாறு அகலாத செம்பொற் சோதீ.



மங்களம்

தனம்தரும், கல்வி தரும் ஓரு நாளும் தளர் வறியா

மனம் தரும், தெய்வ வடிவும் தரும், நெஞ்சில் வஞ்சமில்லா

இனம் தரும்! நல்லன எல்லாம் தரும் அன்பர் என்பவர்கே

கனந்தரும் புங்குழாள் அபிராமி கடைக்கண்களே.








Friday, April 25, 2014

தமிழ் வழி மந்திரங்கள்



                   
                  திருவிளக்கு ஏற்றும் போது
              
               இல்லக விளக்கது இருள் கெடுப்பது
               சொல்லக விளக்கது சோதி யுள்ளது
               பல்லக விளக்கது பலருங் காண்பது
               நல்லக விளக்கது  நமச்சி வாயவே

                      
                        நீர் அளாவுதல்
              
              மூர்த்தி  யாகித் தலமாகி முந்நீர் கங்கை முதலான
              தீர்த்த மாகி யறிந்தறியாத் திறத்தி னாலுமுயிர்க்குநல
மார்த்தி நாளு மறியாமை யகற்றி யறிவிப் பாலெவனப்
போர்த்த கருணைக் கணபதியைப் புகழ்ந்து சரண மடைகின்றோம்.   
     
      திரு நீறு வழங்கும் போது


மந்திரம் ஆவது நீறு வானவர் மேலது நீறு
சுந்தரம் ஆவது நீறு துதிக்கப்படுவது நீறு
தந்திரம் ஆவது நீறு சமயத்தில் உள்ளது நீறு
செந்துவர் வாயுமை பங்கன் திரு ஆலவாயன் திருநீறே!


எலுமிச்சம் பழம் சுற்றும்போது

 

ஏது பிழை செய்தாலும் ஏழையே னுக்கிரங்கி

தீது புரியாத தெய்வமே -நீதி

தழைக்கின்ற போருர்த் தனிமுதலே! நாயேன்

பிழைக்கின்ற வாறுநீ பேசு.

 

 

               தேங்காய்ச் சுற்றும் போது

 

கல்லாப் பிழையும் கருதாப்பிழையும் கசிந்துருகி

நில்லாப் பிழையும் நினையாப்பிழையும். நின் ஐந்தெழத்தை

சொல்லாப்பிழையும், துதியாப்பிழையும், தொழாப்பிழையும்,

எல்லாப்பிழையும், பொருத்தருள்வாய் கச்சி ஏகம்பனே!.

 

          பூசணிக்காய் சுற்றும் போது

 

வாழ்க அந்தணர் வானவர் ஆனினும்

வீழ்க தண்புனல் வேந்தனும் ஓங்குக!

ஆழ்க தீயது எல்லாம் அரன் நாமமே

சுழ்க வையகமும் துயர் தீர்கவே!  

 



             
                  

Wednesday, February 26, 2014

மூலிகை சாபநிவர்த்தி

மூலிகை சாபநிவர்த்தி மந்திரம்

பொதுவான மந்திரம் 


”ஆனைமுகனை அனுதினமும் மறவேன் அகத்தியர் சாபம் நசிநசி!

பதினெண்சித்தர் சாபம் நசிநசி! தேவர்கள் சாபம் நசிநசி!

மூவர்கள் சாபம் நசிநசி! மூலிகை சாபம் முழுதும் நசிநசி!.”

குறிப்பு : மேற்கூறிய மூலிகை சாபநிவர்த்தி மந்திரத்தை  ஞாயிற்றுக்கிழமை  பிரம்ம முகூர்த்த வேலையில் ஆதிமூலக்கொடிக்கு (கொடிஅருகு) கன்னி நுால்காப்பு கட்டி மறு ஞாயிற்றுக்கிழமை வரை தொடர்ந்து ஒரு இலட்சம் உரு ஏற்றவும். பிறகு நமக்கு தேவையான பட்சத்தில் மூன்று முறை கூறி சாபநிவர்த்தி செய்து நமக்கும் பிறர்க்கும் பயன்படுத்தலாம்.

மூலிகை பிராண பிரதிஷ்டை


”ஓம்மூலி மஹாமூலி ஜீவமூலி

உன் உயிர் உன் உடலில் நிற்க சிவா.”

குறிப்பு : இந்த மந்திரத்தை மூன்றுதரம் சொல்லி கொஞ்சம் விபூதியும் அருகம்புல்லும் மேலே போட்டு வணங்கி ஆணிவேர் அருபடாமல் விரல்நெகங்கள் படாமல் எடுத்து பயன்படுத்திக் கொள்ள மூலிகை உயிருடனிருந்து பலன் கொடுக்கும்.

சர்வ வசிய மூலிகை


  ஆதிவாரத்தில் ஆலம் புல்லுருவிக்கு சாப நிவர்த்தி செய்து பிராண பிரதிஷ்டை செய்து துாப தீபம் காட்டி மஞ்சள் நுால் காப்பு கட்டி மறு ஆதிவாரம் சூரிய உதயத்தில் பொங்கலிட்டு பால் பழம் நைவேத்தியம் வைத்து  துாப தீபங் காட்டி ”அம் அம் வசீகரம் ஜெயமாதா” என்று  இலட்சம் உரு கொடுத்து எடுத்துக்கொள்ளவும். இதனால் சர்வ வசியமும் சித்தியாகும்.











Tuesday, February 25, 2014

பூஜாவிதி

செய்முறை பூஜாவிதி

 
  சுத்தமாகிய தனிமையான ஓர் அறையில் பத்மாசனத்தில் வடகிழக்காக அமர்ந்து, அடி முடி நடுவாய் மனதை நிறுத்தி, செப்புத்தகட்டில் வரைந்த யந்திரதுக்கு சாபவிமோசனம் பிராணபிரதிஷ்டை செய்து, ராஐ கனியால் சுத்தி செய்து எண்ணை, சீக்காய், பால், தயிர், நெய், தேன், பஞ்சாமிர்தத்தால் அபிசேகம் செய்வித்து  நம்மால் முடிந்த நைவேத்தியம் படைத்து, யக்ஞம் வளர்த்தி யக்ஞபிரதிஷ்டை செய்வித்து உருத்தராட்ச மணியால் காலை பகல் மாலை நடுநிசியாக தொடர்ந்து குண்டலினி வல்லபை சக்தியை மூலாதாரத்தில் பாவனையால் சக்தியை எழுவித்து ஒருமண்டலம் பயிற்ச்சித்தால், இந்த மூலவிநாயகர் வசியத்தால் அஷ்டமா சித்தியும், அஷ்ட கர்மமும் கரதலா கமலம்போல் நடைபெறும்.