Saturday, April 26, 2014

தமிழ் வழி மந்திரங்கள்



துாப தீபம்

பெரும்புலர் காலை மூழ்கி பித்தர்க்குப் பத்தராகி

அரும்பொடு மலர் கொண்டு ஆர்வத்தை உள்ளே வைத்து

விரும்பிநல் துாபதீபம் விதியினால்இட வல்லார்க்குக்

கரும்பினில் கட்டி போல்வார் கடவூர் வீரட்டனாரே




கற்பனைக் கடந்த சோதி கருணையே உருவமாகி

அற்புதக் கோலம் நீடி அருமறைச் சிறத்தின்மேலாம்

சிற்பர வியோமமாகும் திருசிற்றம்பலத்துள் நின்று

பொற்புடன் நடம் செய்கின்ற பூங்கழல் போற்றி போற்றி




ஒசை ஒலிஎலாம் ஆனாய் நீயே

   உலகுக்கு ஒருவனாய் நின்றாய் நீயே

வாசமலரெலாம் ஆனாய் நீயே

   மலையான் மருகனாய் நின்றாய் நீயே

பேசப்பெரிதும் இனியாய் நீயே

   பிரானாய் அடி என்மேல் வைத்தாய் நீயே

தேச விளக்கெலாம் ஆனாய் நீயே

   திருவையாறு அகலாத செம்பொற் சோதீ.



மங்களம்

தனம்தரும், கல்வி தரும் ஓரு நாளும் தளர் வறியா

மனம் தரும், தெய்வ வடிவும் தரும், நெஞ்சில் வஞ்சமில்லா

இனம் தரும்! நல்லன எல்லாம் தரும் அன்பர் என்பவர்கே

கனந்தரும் புங்குழாள் அபிராமி கடைக்கண்களே.








No comments: