Thursday, June 13, 2013

தெய்வீக யந்திரங்கள்



தெய்வீக யந்திரங்கள்

யந்திரம் என்பது நமது உடலில் உள்ள ஆரு ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டது. மாந்திரீக கலையில் யந்திரத்தின் பங்கு மிக முக்கியமானது. பஞ்சபூத அடிப்படையில் இயங்கும் இறைவனை தத்துவரீதியாக வரிவடிவில், எழுத்து வடிவில், செம்பு, வெள்ளி, தங்கம் போன்ற உலோகங்களில் வடிவமைத்து வணங்குகிறோம். நாம் உச்சரிக்கும் மந்திர ஒலியின் சக்திக்கிணங்க யந்திரங்கள் ஆற்றலை வெளிப்படுத்துகின்றன. இந்த யந்திரங்களினால் நன்மை, தீமை இரண்டும் செய்ய முடியும்.

1. ஜெனவசிய யந்திரம்: 6 செ.மீ நீள அகலம் கொண்டது. தனலெட்சுமி பீஜம் பொறிக்கப்பட்டு தங்கள் பெயர் நட்சத்திரம் எழுதி பூஜிக்கப்பட்டது. ஆண்கள், பெண்கள் அனைவரும் தங்களது பாக்கெட், மனிபர்ஸ் கல்லாபெட்டிகளில் வைத்துக்கொள்ளலாம். தங்களது பெயர் நட்சத்திரம் ஆடர் செய்யும் போது போனில் தெரிவிக்கவும். ரூ.1550 



 
2. ஓம் மகா கணபதி யந்திரம் : 15 செ.மீ நீள அகலம் கொண்டது. காரியதடையகலும் கண்திருஷ்டி விலகும் ரூ.2450

3. சிவ சுப்பிரமணிய யந்திரம் : துஷ்டசக்திகள் பீடைகள் விலகும். ஏவல், பில்லி, சூனியம் வீட்டிற்குள் அண்டாது. ரூ.2450.

4. ஸ்ரீ சொர்ணாகர்ஷண பைரவர் யந்திரம் : செல்வ விருத்தியடையும் செய்தொழில் மேலோங்கும் தாமதப்பட்ட திருமணம் விரைவில் நடக்கும் குழந்தை பாக்கியம் விரைவில் ஏற்படும். ரூ.4450 



5. ஸ்ரீ பகவதி யந்திரம் : அனைத்து செல்வங்களையும் அளிக்கவல்லது முறையாக பூஜிப்பவரை எந்த சக்தியாலும் வெல்ல முடியாது. நீடித்த புகழையும், நிலையான வாழ்வும், நீண்ட ஆயுளும் தரும் சக்தி படைத்தது. ரூ.5450

6. ஸ்ரீ (வாலை) வாராகி யந்திரம் : லலிதா பரமேஸ்வரியின் பிரதான தளபதியாக விளங்கும் வாராகி தேவியை பூஜிப்பவர்கள் இந்த பூமியில் உள்ள இக பர சுகம் அனைத்தும் பெற்று விளங்குவார். ரூ.7450 இன்னும் தங்களுக்கு வேண்டிய சிறுதெய்வ பெறுதெய்வ யந்திரங்களான பாலாம்பிகை, புவனை, திரிபுரை, சிதம்பர யந்திரம் போன்ற தெய்வங்களின் யந்திரங்கள் ஆர்டரின் பேரில் கனமான செப்பு தகட்டில் சுத்தி செய்து சாபவிமோசனம் பிராணபிரதஷ்டை யக்கியபிரதிஷ்டை செய்து மூல மந்திரத்துடன் கூரியர் தபாலில் அனுப்பி வைக்கப்படும். 1550 ரூபாய் முதல் 25,000 ருபாய் வரை யந்திரங்கள் கிடைக்கும்.

Sunday, January 27, 2013

பாதாளஅஞ்சனம்

அஞ்சணம் என்றால் பொதுவாக பெண்கள் கண்களுக்கு இட்டுகொள்ளும் மையை குறிப்பிடலாம். ஆனால் வேறு சில அஞ்சனங்களும் இருக்கிறது இவைகள் மாந்திரீக வேலைகளுக்கு பயன்படுகிறது. இவற்றில் ஒன்றுதான் இந்த பாதாள அஞ்சணம்.

செய்முறை : குப்பைமேனி செடியின் வேர், வெள்ளெருக்கன் வேர், வெள்ளை விஷ்னுகாந்தி வேர், ◌வெள்ளைச் சாரணை வேர், வெள்ளைக் காக்கணம் வேர் இவை ஐந்தையும் முறைப்படி காப்புகட்டி சாபம் போக்கி ஆணிவேர் அறாமல் பிடுங்கிவந்து, நிழலில் உலர்த்தி தீயில் கருக்கி வஷ்திரகாயம் செய்து வைத்துகொண்டு ஒரு கோட்டாணைப் பிடித்து உரோமம்,குடல் நீக்கி குழித்தையலம் எடுத்து ஒரு கல்வத்திலிட்டு முலிகையுடன் தைலத்தை சேர்த்து இரண்டு ஜாமம் (6 மணி நேரம்) அரைக்கவேண்டும்.பிறகுபுனுகு,கோரோசணம்,பச்சைகற்பூரம்,குங்குமப்பூ,கஸ்துரி இவைகளை வகைக்கு 1 கிராம் வீதம் சேர்த்து மீண்டும் ஓரு ஜாமம் அரைத்தால் மை பக்குவம் அடையும். பிறகு இந்த மையை வெள்ளிச் சிமிழிள் பத்திரப்படுத்தவும்.

பிரயோகம் :இந்த மையை கொஞ்சம் எடுத்து, வெற்றிலை ஒன்றில் தடவி விளக்கின் ஒளியில் பார்த்தால், பூமிக்குள் இருக்கும் பொருள்கள் யாவும் தெரியும். நவரத்தினம்,தங்கம்,வெள்ளி முதலிய உலோகங்கள் இருப்பதைக் காணலாம் தண்ணீர் ஊற்று,தண்ணீருக்குள் இருக்கும் பொருள் முதலியனவும் தெரியும். இது பாதாள அஞ்சனம் என பெயராதலால் வேறு உபயோகத்திற்கு பயன்படாது.

மோடிவித்தை

இது என்ன பாதாளமோடி எங்களுக்கு நரேந்திர மோடியைத்தான் தெரியும் குஜராத்தின் முதல்வர் என்று .மோடி என்பது மாந்திரீகர்கள் தங்களில் யார் சிறந்த மாந்திரீகன் என்று தங்களுக்குள் போட்டி வைப்பார்கள் அந்தபோட்டியில் யார் வெல்கிறார்களோ அவர்களுக்கு சில வெகுமதியும் பாராட்டும் அளிப்பார்கள்

ஏறுசிங்கி

 ஏறுசிங்கி என்ற மூலிகை ஒன்று இருக்கிறது. இந்த மூலிகையின் தண்டுகளில் புலியின் நகங்களை போன்று முட்கள் ஏறுவரிசையில் வலைந்து காணப்படும். இந்தவகை மூலிகைகள் பெரும்பாலும் மலைகளில் காணப்படும். குறிப்பாக தமிழகத்தில் கொல்லிமலை மற்றும் சதுரகிரியில் இருக்கின்றன.

Saturday, January 26, 2013

புலிப்பாணி சிமிழ் வித்தை

புலிப்பாணி சிமிழ் வித்தை

புலிப்பாணி சித்தர் எழுதிய நுல்களில் ஒன்று புலிப்பாணி சிமிழ் வித்தையாகும், இவர் சில மருத்துவ நுல்கள் மற்றம் ஜாலம் மாந்திரீகம் ஜோதிடம்  போன்ற நுல்களை எழுதியுள்ளார் இதில் புலிப்பாணி ஜோதிடம் 300 சிறந்த தமிழிழ் ஜோதிடநுல்.

தந்திரம்


தந்திரம் என்றால் என்ன ? முதல் பதிவில் கூறியது போல் மந்திரம். பீஜ ஒலியையும், தந்திரம் (தாந்திரீகம்) சூட்சம இயக்கத்தையும் ஒருங்கே செயல்படுத்துவது தந்திரம் என்றும், மந்திரம் என்றும் பொதுவாக கூறலாம். தந்திரம் அகவழிபாட்டிலும் புறவழிபாட்டிலும் செயல்படுகிறது. அகவழிபாடானது நமது உடலில் இயங்கக்கூடிய நாடிகளை யோகம், தியானம், பிராணயாமம் போன்ற பயிற்ச்சிகளின் மூலம் தூண்டுவதனால் இயங்கக்கூடிய ஆறாதாரசக்கரங்கள் சில சக்திகளை வெளிபடுத்துகிறது. இந்த சக்திகள் மூலம் சில சித்துக்களை மணிதனால் செயல்படுத்தமுடிகிறது. இந்த ஆறு சக்கரங்களையும் முறையாக குண்டலியில்லிருந்து துரியம் வரை ஏற்றி கடுமையாக பயிற்ச்சிப்பதின் மூலம் அறிய சித்துக்களை பெற்று சித்தனுள் சித்தனாகி சிவனாகலாம்.

ஆனால் இன்று இக்கலையை பயிற்றுவிப்பவர்கள் உலகில் விரல்விட்டு எண்னக்கூடியவர்களே முறையாக கற்றுக்கொள்ள  எவரும் முன்வருவதில்லை அப்படியே வந்தாலும் மூலாதாரம், சுவாதிக்ஷ்டானம், மணிப்பூரகத்தை எட்டுவதில்லை ஆகவே இந்த அகவழிப்பாட்டுமுறை முற்றிலும் அழிந்து விட்டது என்றே கூறவேண்டும். இந்த அகவழிபாட்டு முறையான குண்டலினி பயிற்ச்சியை குரு வழி மூலம் மட்டுமே முற்றிலும் கற்க்கமுடியும். ஒவ்வொரு சக்கரத்தையும் மந்திரங்கள் மூலம் மேலேற்றி துரியத்தை (பிரம்மத்தை) யடைய குருவானவர் பயிற்ச்சியளிப்பார்.

ந்தவழிபாடு முற்றிலும் தனிமையில் ஏகாந்தமான இடத்தில் இருந்துகொண்டு செய்யக்கூடிய பயிற்ச்சியாகும். இந்த பயிற்ச்சியை னைவராலும் கற்க்க இயலாது மிகுந்த மனோபலம் இல்லறத்தில் பற்றற்று இருத்தல் உடல் துய்மை உள்ளத்துய்மை குரு பக்தி தெய்வநம்பிகை அன்பு கருனை போன்றவற்றை கடைபிடிக்கவேண்டும். னுஷ்டானங்களை சரியாக கடைபிடித்தால் சித்தனாகலாம். இல்லையேல் சித்துக்களில் மயங்கி துர் மாந்திரீகன் என்று துற்றப்பட்டு பித்தனாகி திரிந்து மாள்வார்கள்.  இக்கலையானது புறவழிபாட்டில் பெறும்பாலான மக்களால் சிறு தெய்வ வழிபாடாக வழிபடப்படுகிறது. சரியை கிரியை என்று செல்லக்கூடிய சடங்கு முறைகள் பல்வேறுபட்ட மதங்ளாலும் இனங்களாலும் கடைபிடிக்கப்ட்டு வருகிறது. குறிப்பாக இந்து மதத்தில் சங்ககாலம் தொட்டே (குமரி கண்டம்) வழிபடப்படுகிறது . பாண்டிய ,சோழ மண்ணர்கள் காலத்தில் இக்கலையானது மேலும் வளர்ந்து போர்ப்படை வீரர்களை வீழ்த்துவதர்காகவும் பயன்படுத்தப்பட்டது. மேலும் பொது மக்களிடையே தவறான முறைகளில்  கையாளப்பட்டு ஓருவரை ஓருவர் மறைமுகமாக தாக்கியும் அழித்தும் வந்தனர். பிற்காலத்தில் அந்நிய படையெடுப்புக்களாலும்  நாகரிக வளர்ச்சியாலும் அழிந்து (மறைந்து) இன்று எஞ்சிய சில முறைகள் இங்கொன்றும் அங்கொன்றும் சிலரால் மட்டும் பரம்பரை வழியாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் இவர்களுக்கும் இதன் சூட்சமங்கள் நேகம் தெரிவதில்லை. காரணம் தாத்தா சொன்னதை, செய்ததை அப்படியே அப்பாவும் பிறகு மகனும் பேரனும் அதன் சூட்சமத்தை கேளாமல் செய்து வந்தனர் இன்றும் அவ்வாறே செய்கின்றனர். காரனம் குருபக்தி என்பதாலும் இக்கலையின் மீது இருந்த பயத்தினாலும்  இக்கலை யானது அழிவுற்றது இனிவரும் காலங்களில் இக்கலை இருந்ததர்க்கான அடிச்சுவடே இல்லாமல் அழிந்து போகும்.