Saturday, January 26, 2013

தந்திரம்


தந்திரம் என்றால் என்ன ? முதல் பதிவில் கூறியது போல் மந்திரம். பீஜ ஒலியையும், தந்திரம் (தாந்திரீகம்) சூட்சம இயக்கத்தையும் ஒருங்கே செயல்படுத்துவது தந்திரம் என்றும், மந்திரம் என்றும் பொதுவாக கூறலாம். தந்திரம் அகவழிபாட்டிலும் புறவழிபாட்டிலும் செயல்படுகிறது. அகவழிபாடானது நமது உடலில் இயங்கக்கூடிய நாடிகளை யோகம், தியானம், பிராணயாமம் போன்ற பயிற்ச்சிகளின் மூலம் தூண்டுவதனால் இயங்கக்கூடிய ஆறாதாரசக்கரங்கள் சில சக்திகளை வெளிபடுத்துகிறது. இந்த சக்திகள் மூலம் சில சித்துக்களை மணிதனால் செயல்படுத்தமுடிகிறது. இந்த ஆறு சக்கரங்களையும் முறையாக குண்டலியில்லிருந்து துரியம் வரை ஏற்றி கடுமையாக பயிற்ச்சிப்பதின் மூலம் அறிய சித்துக்களை பெற்று சித்தனுள் சித்தனாகி சிவனாகலாம்.

ஆனால் இன்று இக்கலையை பயிற்றுவிப்பவர்கள் உலகில் விரல்விட்டு எண்னக்கூடியவர்களே முறையாக கற்றுக்கொள்ள  எவரும் முன்வருவதில்லை அப்படியே வந்தாலும் மூலாதாரம், சுவாதிக்ஷ்டானம், மணிப்பூரகத்தை எட்டுவதில்லை ஆகவே இந்த அகவழிப்பாட்டுமுறை முற்றிலும் அழிந்து விட்டது என்றே கூறவேண்டும். இந்த அகவழிபாட்டு முறையான குண்டலினி பயிற்ச்சியை குரு வழி மூலம் மட்டுமே முற்றிலும் கற்க்கமுடியும். ஒவ்வொரு சக்கரத்தையும் மந்திரங்கள் மூலம் மேலேற்றி துரியத்தை (பிரம்மத்தை) யடைய குருவானவர் பயிற்ச்சியளிப்பார்.

ந்தவழிபாடு முற்றிலும் தனிமையில் ஏகாந்தமான இடத்தில் இருந்துகொண்டு செய்யக்கூடிய பயிற்ச்சியாகும். இந்த பயிற்ச்சியை னைவராலும் கற்க்க இயலாது மிகுந்த மனோபலம் இல்லறத்தில் பற்றற்று இருத்தல் உடல் துய்மை உள்ளத்துய்மை குரு பக்தி தெய்வநம்பிகை அன்பு கருனை போன்றவற்றை கடைபிடிக்கவேண்டும். னுஷ்டானங்களை சரியாக கடைபிடித்தால் சித்தனாகலாம். இல்லையேல் சித்துக்களில் மயங்கி துர் மாந்திரீகன் என்று துற்றப்பட்டு பித்தனாகி திரிந்து மாள்வார்கள்.  இக்கலையானது புறவழிபாட்டில் பெறும்பாலான மக்களால் சிறு தெய்வ வழிபாடாக வழிபடப்படுகிறது. சரியை கிரியை என்று செல்லக்கூடிய சடங்கு முறைகள் பல்வேறுபட்ட மதங்ளாலும் இனங்களாலும் கடைபிடிக்கப்ட்டு வருகிறது. குறிப்பாக இந்து மதத்தில் சங்ககாலம் தொட்டே (குமரி கண்டம்) வழிபடப்படுகிறது . பாண்டிய ,சோழ மண்ணர்கள் காலத்தில் இக்கலையானது மேலும் வளர்ந்து போர்ப்படை வீரர்களை வீழ்த்துவதர்காகவும் பயன்படுத்தப்பட்டது. மேலும் பொது மக்களிடையே தவறான முறைகளில்  கையாளப்பட்டு ஓருவரை ஓருவர் மறைமுகமாக தாக்கியும் அழித்தும் வந்தனர். பிற்காலத்தில் அந்நிய படையெடுப்புக்களாலும்  நாகரிக வளர்ச்சியாலும் அழிந்து (மறைந்து) இன்று எஞ்சிய சில முறைகள் இங்கொன்றும் அங்கொன்றும் சிலரால் மட்டும் பரம்பரை வழியாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் இவர்களுக்கும் இதன் சூட்சமங்கள் நேகம் தெரிவதில்லை. காரணம் தாத்தா சொன்னதை, செய்ததை அப்படியே அப்பாவும் பிறகு மகனும் பேரனும் அதன் சூட்சமத்தை கேளாமல் செய்து வந்தனர் இன்றும் அவ்வாறே செய்கின்றனர். காரனம் குருபக்தி என்பதாலும் இக்கலையின் மீது இருந்த பயத்தினாலும்  இக்கலை யானது அழிவுற்றது இனிவரும் காலங்களில் இக்கலை இருந்ததர்க்கான அடிச்சுவடே இல்லாமல் அழிந்து போகும். 

No comments: