Showing posts with label மனோசக்தி. Show all posts
Showing posts with label மனோசக்தி. Show all posts

Tuesday, August 27, 2013

மனோசக்தி



மனமும் மனோசக்தியும்
   

  நாம் முதலாவது மனம் என்றால் என்ன என்பதை தெரிந்துகொள்ள வேண்டும். அதன் உண்மையைத் தேரிந்துக் கொண்டால் பிறகு அதனுடைய சக்திகள் என்பதெல்லாம் உள்ளங்கை நெல்லிக்கனிபோல சுலபமாகத் தெரிந்துக் கொள்ளலாம். உலக வாழ்க்கையில் மனம் என்றால் பல அநேகருக்குத் தெரியவே தெரியாது. என்றாலும் அவர்கள் எல்லாம் என்மனதிலேயிருக்குது என்பார்கள் அவ்வாறு சொல்வதெல்லாம் இயற்கை வழக்கச் சொல்லேயாகும்.


 


  மனம் என்பது ஒரு சிலருக்கே தெரியும் அவர்களைத்தான் அறிவுடையோர் என்றும் கற்றவர்கள் என்றும் சித்தர்கள் என்றும் ரிஷிகள் யோகிகள் தபசிகள் ஞானிகள் என்றும் சொல்கிறோம். மனம் என்னும் வஸ்துவை பகீர்முக உருவமாக காணமுடியாது. அந்தர்முக சுட்சம சக்தியால்தான் அறியமுடியும் அறியலாம் காணலாம். அசைவற்ற ஆத்மாவின் அசையும் சக்தி எதுவோ அதுவே மனம் என்று சொல்லப்படும். அதன் விருத்தி பலவாகி மனம் என்றும் உடலேன்றும் முச்சென்றும் நினைவென்றும் தொழில்முறை இயக்கத்தால் கூறப்படும்.  


  


  மனதுக்கு அந்தர்யாமி ஆத்மா ஆத்மாவுக்கு அந்தர்யாமி மனம் இந்த இரண்டிற்கும் தொடர்பு நடுநிலை யெதுவோ அதுவே அறிவாகும். மனம் அறியும் சக்தியை அடையும்போது அதை அறிவென்று சொல்லப்படும். முறையே ஆத்மாவின் விருத்தி உணர்வு, உணர்வின் விருத்தி அறிவு, அறிவின் விருத்தி மனம், மனத்தின் விருத்தி செயல் எனப்படும். மனத்தின் உருவத்தையும் அதன் வர்ணத்தையும் பிரதிபலிக்கும்படி நிருபித்து காட்ட முடியாது. ஆனால் சாஷி ருபமாகத்தான் நிருபிக்கமுடியும். அது உருவமற்றது, நிறமற்றது, தோற்றமற்றது, ஆதியும் அநாதியுமானது நினைவு எதுவோ அதுவே மனம், சிந்தனை எதுவோ அதுவே மனம், எண்ணம் எதுவோ அதுவே மனம் என்பது சித்தாந்த உண்மை.


   
  மனதுக்கு அடிப்படை ஆசார இருப்பிடம் பொதுவாக சரீரமேயாகும். சரீரத்தில் எங்கும் வியாபித்துள்ளது உயிர்பின் சக்தியாகிய மனம் செவியில் ஓசையாகவும் கண்ணில் தோற்றமாகவும் நாசியில் வாசனையாகவும் நாவில் சுவையாகவும் உடலில் பரிசமாகவும் பிரதிபலிக்கின்றது. மனமும் புத்தியும் இந்திரியங்களும் அகங்காரங்களும் அந்தக்கரணமும் உட்கருவி யெனப்படும். இவைகள் யாவும் ஒன்று கூடியதே சித்தமெனப்படும். இந்த சித்தத்துக்கு அதிகாரி மனம். மனதுக்கு அதிகாரி அறிவும் ஆன்மாவும் இதையே தாயுமானவர் சித்த மறியாதபடி சித்தத்தில் நின்றிலங்கும் திவ்ய தேஜோமயம் என்றார். இந்த சித்தத்தில் எழும் விருத்திகளே எண்ணங்கள் எனப்படும் மனம் எண்னுவதிலே எண்ணமென்றும் சிந்திப்பதினாலே சிந்தையென்றும் பெயர் பெறும்.   

 


   எண்ணம் என்பது பொருந்தும் ஆற்றல் பிரிக்கும் ஆற்றல்போன்ற ஒருவகை சக்தியாகும் அதையே மனேசக்தியென்றும் சொல்லப்படும். இயற்கையிலுள்ள சக்திகளஞ்சியத்திலிருந்து சித்தமெனும் கருவியானது சிலவற்றையெடுத்து தொழிற்படுத்தி எண்ணங்களாக வெளியே செலுத்துகின்றது. எண்ணங்கள் வெளியே சென்று மகா பஞ்சபூத சக்தியில் கலந்து உறவாடி செயல்களாகமாறி தொழில் புரிகின்றன. அதுகள் எண்ணத்துக்கு தக்கவாறு நன்மையாகவும் தீமையாகவும் செயல்புரிவது அதன் இயற்கையாகும். முதலாவது மனம் என்றால் என்ன என்பதையும் இரண்டாவது மனோவிருத்தி யென்னும் சத்தியென்றால் என்ன வென்பதையும் முன்றாவது எண்ணம் என்பது என்ன என்பதையும் நான்காவது மனோவசிய சக்திக்கு அடிப்படையாகிய மகா அமைதியென்பது எத்தகையது என்பதையும் அறிய வேண்டியது முதற் கடமையாகும். மனத்தின் சக்தியையும் எண்ணத்தின் சக்தியையும் அறியாது அடையாது செயல் நடத்துவது அநேகமாகத் துன்பத்துகே  ஆளாவான் என்பது சித்தாந்த உண்மை.