Showing posts with label மந்திரம். Show all posts
Showing posts with label மந்திரம். Show all posts

Wednesday, January 23, 2013

மந்திரம்

மாந்திரீகம்
" நிறை மொழி மாந்தர் ஆணையிர் கிளர்ந்த
  றைமொழி தானே மந்திரம் என்ப" - தொல்காப்பியம்.


ந்திரம் என்பது மனோ ஆற்றல், எதையும் எதிர்கொள்ளும் சக்தி, கூர்ந்து கவனிக்கும் தன்மை, தன்னுடைய இலக்கை உற்று நோக்கும் அறிவு, தெளிவான சிந்தனை    ஆகியவை  மந்திரம் ஆகும். மனமானது இந்த அண்டவெளியில் வியாபித்து செயலாற்றுகின்றது  இந்த செயலானது ஒரு குறிபிட்ட இலக்கை அடையும் பொருட்டு தனது மனோ சக்தியை ஒருங்கே குவித்து ஒரு பொருளின் மீது அல்லது ஒரு ஜீவன் மீது செலுத்தும் போது நமது என்ன அலைகளை கிரகித்து அந்த ஜீவனானது செயல்படுகிறது. இந்த செயலே மந்திரம் தந்திரம் என்று கூறுகின்றோம். இந்த மந்திர சக்தியானது ஒலி அதிர்வுகள் மூலம் செயல்படுகிறது  இந்த அண்டமே ஒலி ஒளி ஆற்றலினால் இயங்குகிறது. இந்த அண்டத்திலுள்ள பிண்டங்களாகிய அனைத்து ஜீவன்களும் பஞ்ச பூதங்களால் இயங்குகிறது மந்திரத்திற்கு மொழி, இனம் ,மதம் என்பது கிடையாது அவை எங்கும் வியாபித்து செயல்படக்கூடியது திடமற்றவருக்கும் திடமுள்ளவருக்கும் இடையே நடைபெறும் தகவல் பறிமாற்றமே மந்திரம் ஆகும். சில சூட்சம சக்திகள் நம் புற கண்களுக்கு புலப்படாமல் இந்த பிரபஞ்சத்தில் இயங்குகிறது இவ்வித சக்திகளே மாயா சக்தி என்று கூறுகிறோம். இந்த மாயை (மாயா) எனும் சக்தி பெண்  இவளே இவ்வுலக இயக்கத்தின் மூலாதாரம் (குண்டலினி சக்தி) இந்த சக்தியை முறையாக செயல்படுத்தி சகக்ஷ்காரத்தில் (பிரம்மத்தில்) நிறுத்தி இயக்குவதே மந்திரம் ,தந்திரம், மாய, வித்தையாகும். சித்துக்களை செயல்படுத்துபவன் மாந்திரிகன் ,மந்திரவாதி என்று அழைக்கின்றோம். இந்த ஆற்றலை பயன்படுத்தி சித்திகள் (அட்டமா 8 வகை சித்திகள் 1,அணிமா 2,மகிமா 3,இலகிம4.,,,) புரிபவன் சித்தன் என்றும் சித்தை விடுத்து பிரம்மத்தையே தழுவி நிற்பவன் ஞானி என்றும் ரிஷி என்றும் கூறுகிறோம் .மாந்திரிகன் தன் ஊழ்வினை பயனால் மீண்டும் பிறக்கிறான் சித்தர்கள் மனிதகுலத்திற்க்கு சூட்சமமாக அருள் புரிகின்றனர் ரிஷிகள் (ஞானி) இறைவனுடன் இரண்டறகலந்து இயற்கையுள் இனைந்து விடுகின்றனர். மந்திரங்கள் உயிர் மெய் எழுத்துக்களின் (பீஜங்களினால்) எழுப்பகூடிய அதிர்வெண்  ஒலி அலைகளால் இயங்குகிறது.