Showing posts with label பொது வசியம். Show all posts
Showing posts with label பொது வசியம். Show all posts

Sunday, June 30, 2013

பொது வசியம்

  

    

வசியம் எட்டு வகைப்படும் அவை வசியம், மோகனம், தம்பனம், ஆகர்சனம், உச்சாடனம், பேதனம், வித்துவேடனம் ,மாரணம் என்னும் எட்டு கர்மங்களால் தொழில்படும்.இந்த எட்டுவிதசக்தியையும் மனிதன் முயற்ச்சி செய்தால் பெறமுடியும். இதற்கு மணி,மந்திர.முலிகைகளின் பங்கு மிகமுக்கியம்.

   

  வசியம் என்பதற்கு அடிமைப் படுத்துவது என்று பொருள்.அதாவது கட்டளை இடுபவன் உத்தரவை ஏன் எதற்கு எனக் கேட்காமல் பின்விளைவுகளை பற்றி சிறிதும் சிந்திக்காமல் நிறைவேற்றுவது ஆகும். இந்த வசியம் என்பது கண்களால் மனத்தினால் அல்லது சொல்லால் மற்றவர்களை அல்லது பொருள்களைத் தன்வயப்படுத்துவதாகும். அதாவது தன் சுயபுத்தி,சித்தம்,விருப்பம், மனோரதம் முதலியவற்றை அடக்கி அவைகளைச் செயல்பட விடாமல் தடுத்து வசியப்படுத்துபவனின் விருப்பம் கட்டளைக்கிணங்க நடத்தி வைப்பது வசியமாகும்.

  

  இந்த வசிய சக்தியானது வசியபடுத்துபவனிடமிருந்து வசியத்திற்கு உள்ளாபவனுக்கு நம் விருப்பத்தினை அவன் மனதில் தோன்றச்செய்து அவனை நம் விருப்பப்படி செயல்படுத்தமுடியும்.பொதுவாக வசியங்கள் எட்டு வகைப்படும். மற்றவைகள் இதன் உட்பிரிவுகளாகும்.இந்த வசியத்தை அடைய முலிகைகள் உதவி வேண்டும். அதற்கு தனித்தனி மந்திரங்களும் உண்டு. இந்த எட்டு வசியங்களும் முழுமையாக எல்லோருக்கும் சித்தியாகாது. ஒன்றிரண்டு சித்திகளே சித்தியாகும் விடா முயற்ச்சியின் பலனாக அஷ்டமா சித்துகளையும் பெறமுடியும்.

    

   இந்த வசியக்கலை சங்ககால இலக்கிய வரலாற்றுகளிலும் தற்போதும் நம் நாட்டில் நடைமுறையில் உள்ளது. இந்த வசியத்திற்கு உரிய ‘மை’ தயாரிக்கப்பட்டு அதை பொட்டு போன்று நெற்றியில் (லலாடம்) சுழுமுனையில் வைத்து மந்திர உச்சாடனம் செய்தால் வசியம் சித்தியாகும். இந்த வசிய மருந்து மை இருவகையாகத் தயாரிகப்படுகிறது. ஒன்று முலிகைகளை முறையாக சாபவிமோசனம் பிராணபிரதிஷ்டை செய்து நிழல் பட உலர்த்தி கல்வத்தில் இட்டு குறிப்பிட்ட ஜாமம் வரை அரைத்து சிமிழில் அடைத்து பிறகு சர்வதேவதா பூஜை செய்து பயன்படுத்தப்படுகிறது. இதில் சில மிருகங்களின் அங்கங்களையும் பயன்படுத்தி துஷ்டசக்திகளை ஏவி பயன்படுத்தி சில கெடுபலன்களையும் செய்கின்றனர்.

  

   பொது வசியம் வேண்டுபவர்கள் அகத்தியர் வாத சௌமிய சாகரத்தில் மந்திவாள் பகுதியில் குறிப்பிட்டுள்ள "ஓம் ரீங் வசி வசி" என்னும் மந்திரத்தை கண்களை முடி,உதடு அசையாமல் காலையிலும் மாலையிலும் வடகிழக்கு திசையை நோக்கி 108 முறை ஜெபிக்கவேண்டும். தரையில்  விரிப்பின் மேல் அமர்ந்து  ஜெபிக்க வேண்டும் இவ்வாறு தொடர்ந்து 90 நாட்கள் ஜெபித்தால் சர்வ வசியம் உண்டாகும்.

     

    தனியாக ஒரிடத்தில் அமர்ந்து  மன ஒருமைபாட்டுடன் அமர்ந்து ஜெபிக்க வேண்டும்.பொதுவாக எல்லா மந்திரங்களும் ஜெபித்தஉடனேயே பலன் தருவதில்லை ஒரு லட்சம் முறை உரு ஏற்றிய பின்னரே அவை வேலை செய்யத் தொடங்கும். மேலும் வசிய மந்திரத்தை ஜெபிக்கும்போது வாயின் வலது பக்கத்தில் ஒரு கிராம்பினை ஒதுக்கி வைத்துகொள்ள வேண்டும்.ஆனால் எக்காரணம் கொண்டும் கடிக்கக்கூடாது. ஜெபம் முடிந்ததும் கிராம்பைத் துப்பிவிட வேண்டும்.இது வசிய சக்தியை விரைவு படுத்த உதவும்.

      

    வசியப் பிரயோகம் செய்தால் கண்னுக்குத் தெரிந்த எதிரிகளும் தெரியாத எதிரிகளும் வசியமாகி விடுவார்கள். எதிரிகளின் எதிர்ப்பு அலைகளை மாற்ற நம் வசீகர சக்தியை அதிகரித்துக்கொள்ள வேண்டும். எந்த மந்திரமானாலும் எடுத்த உடனேயே பலனைத்தராது. மிகவும் கவனத்துடன் மந்திரத்தின்  ஒலி மாறாமல் சிந்தனையை மந்திரத்தில் மட்டும் செலுத்தி இலட்சம் உரு ஏற்றினால் மந்திரம் சித்தியாகும்.