Wednesday, March 4, 2015

அறிவோம் ஆன்மீகம்

பூஜையின் போது மணி ஒசை எழுப்புவதன் நோக்கம்


  எப்போதும் நாம் பூஜையின் போது மணி ஓசை எழுப்புவது வழக்கம். ஏனெனில் இது நம் முன்னோர்கள் சொன்ன ஒரு சூட்சம விஷயம். அப்படி என்ன இருக்கிறது இந்த மணி ஓசை எழுப்புவதில் என்று உங்களுக்கு தோன்றினால் கீழ் உள்ளவற்றை படித்து பயன் பெறுங்கள்.

   பூஜையின் போது நாம் எழுப்பும் மணியோசை துர் தேவதைகளை வெளியே அனுப்பிவிடும். ஏனெனில் துர்தேவதைகளுக்கு மணி ஓசை என்றால் பயம். மேலும் வீட்டில் அடிக்கடியோ அல்லது பகலில் துாங்குமாறு நினைப்பை மாற்றுவது துர்தேவதைகளின் வேலையே எனவே அவற்றை விரட்டவே வீட்டில் மணி அடிக்கப்படுகிறது. மேலும் கோவில்களில் தொங்கவிடப்பட்டுள்ள மணிகளை ஒலிக்க செய்வதன் மூலம் அது 7 நொடிகள் எதிரொலிக்கும். இந்த 7 நொடிகளும் வலது மற்றும் அடது மூளை ஒன்றாக இணைந்து செல்படும் என்பது ஆன்றோர் வாக்கு மட்டுமின்றி ஆராய்ச்சியாளர்கள் கருத்தும் கூட இந்த 7 நொடிகளில் நம் உடலில் உள்ள 7 சக்கரங்கள் வேலை செய்து நம்மை மெய்மறக்க செய்து உடம்பை லேசாக்கி புத்துணர்ச்சி தரும். 

   நினைவிருக்கிறதா மார்கழி மாதத்தில் கோவிலில் இருந்து அதிகாலையில் தெருக்கள் முழுவதும் சென்று சங்கு ஊதியும் மணி ஓசை எழுப்பியும் தெய்வத்தின் ஊர்வலம் நடைபெறும். ஏனெனில் இந்த மாதத்தில் அதிகம் குளிர் அடிப்பதால் துர்தேவதைகள் நடமாட்டம் அதிகம் இருக்கும். அவற்றை விரட்டவே இவ்வகை வழிமுறைகளை கையாண்டிருக்கின்றனர் நம் முன்னோர்கள் எனவே புஜையின் போது மணி அடிப்பது முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை இந்த பதிவின் மூலம் உணர்ந்தருப்பீர்கள்.

 
   


No comments: