Friday, August 9, 2013

குரு வணக்கம்



                                   குரு வணக்கம்

இயம்புவதும்  ஆதார  இறைவானீயே

இதுவொன்றே  வழிகாட்டும் குருவும்நீயே

நயம்படவே லயப்படுத்தும் நாதன்நீயே

நான்முகனும் திருமாலும் சிவனும்நீயே

வயநமசி வாயகுரு வாலைநீயே

வாயில்வரும் மந்திரங்க ளெல்லாம்நீயே

கயமுகனும் அறுமுகனும் காட்சிநீயே

கண்கண்ட தெய்வம்நீ யுண்மைநீயே

உண்மையென்ற பொருளறியா வுலகமாந்தர்

உண்மயமுந் தன்மயமும் உணரமாட்டார்

மண்மயமே யாவதல்லால் கதிவேறுண்டோ

மண்மயத்தை விண்மயத்தில் வைக்கவேண்டும்,

விண்மயமுங் கண்மயமும் ஒன்றேயானால்

வேதாந்த வெட்டவெளி நீரேயாகும்

கண்மயமே பொன்மயமே கண்ணேவாவா

கருத்தில்வளர் குருவேசற் குருவேவாவா.

No comments: